வெண்மையாக விளங்கும் முருகன் திருவுருவம் மிகவும் அழகியது. “செங்கோடனைச் சென்று கண்டு தொழ நாலாயிரங்கண் படைத்திலனேயந்த நான்முகனே” என்று அருணகிரியார் பாடுகின்றார். இத்தலத்து முருகப் பெருமான்மீது அருணகிரியாருக்கு நிரம்பவும் காதல். பலப்பல இடங்களில் இருப்பதனால் இதற்கு நாகாசலம் என்றும் பேருண்டு. அன்பாக வந்து உன்றாள் பணிந்து ஐம்பூத மொன்ற நினையாமல் அன்பால்மிகுந்து நஞ்சாரு கண்க ளம்போரு கங்கள் முலைதானும் கொந்தே மிகுந்து வண்டாடி நின்று கொண்டாடுகின்ற குழலாரைக் கொண்டே நினைந்து மன்பேது மண்டி குன்றா மலைந்து அலைவோனே மன்றாடி தந்த மைந்தா மிகுந்த வம்பார் கடம்பை யணிவோனே வந்தே பணிந்து நின்றார் பவங்கள் வம்பே தொலைந்த வடிவேலா சென்றே யிடங்கள் கந்தா எனும்பொ செஞ்சேவல் கொண்டு வரவேணும் செஞ்சாலி கஞ்ச மொன்றாய் வளர்ந்த செங்கோ டமர்ந்த பெருமாளே. பதவுரை மன்று ஆடி தந்த மைந்தா-சபையில் ஆடிய நடராஜப் பெருமானுடைய குமாரரே! மிகுந்த வம்பு ஆர் கடம்பை அணிவோனே-மிக்க வாசனை நிறைந்த கடப்ப மலரை யணிபவரே! வந்தே பணிந்துநின்றார் பவங்கள்-சந்நிதிக்கு வந்து பணிந்து நின்ற அடியார்களின் பிறப்புக்களின், வம்பே தொலைந்த வடிவேலா- துயரத்தைக் களைந்த கூரிய வேலாயுதரே! சென்றே இடங்கள்-அடியேன் சென்ற இடங்களில், கந்தா எனும் பொ-கந்தக் கடவுளே என்று |