பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 117

 

அழைக்கும்பொழுது, செம் சேவல் கொண்டு வரவேணும்-செவ்விய சேவலை ஏந்தி என் முன் வரவேண்டும், செம் சாலி-செந்நெற்பயிரும், கஞ்சம்- தாமரையும், ஒன்றாய் வளர்ந்த-ஒன்றுபட்டு வளர்ந்துள்ள, செங்கோடு அமர்ந்த- திருச்செங்கோட்டில் வீற்றிருக்கும், பெருமாளே-பெருமையில் மிகுந்தவரே! அன்பாக வந்து-அன்பாக வந்து, உன்தாள் பணிந்து-உமது திருவடியைப் பணிந்து, ஐம்பூதம் ஒன்ற நினையாமல்-மிகுந்த-அன்புமிகுந்து, நஞ்சு ஆகும் கண்கள்-விடம் நிறைந்த கண்கள், அம்போருகங்கள் முலைதானும்- தாமரைமொட்டு போன்ற தனங்கள், கொந்தே மிகுந்த-பூங் கொத்துக்கள் நிரம்பி, வண்டு ஆடிநின்று கூந்தல் இவற்றையுடைய பொது மாதரை, கொண்டே நிறைந்து-மனதில் கொண்டு நிறைந்து, மன்பேது மண்டி-நிலை பெற்ற அறியாமை நிறைந்து, குன்றா மலைந்து அலைவேனோ-மனம் குன்றி ஒரு வழிப் படாமல் அலைச்சல் உறுவேனோ?

பொழிப்புரை

சபையில் நடனம்புரிகின்ற நடராஜப் பெருமானுடைய திருக்குமாரரே! மிகுந்த வாசனை நிறைந்த கடப்ப மலர்மாலை புனைந்தவரே! உமது சந்நிதிக்கு வந்து பணிந்த அடியார்களின் பிறவித் துயரைக் களையும் வடிவேலவரே! அடியேன் சென்ற இடங்களில் “கந்தா!” என்று அழைப்னோயின் அங்கு நீர் சேவல் கொடியை ஏந்திக் கொண்டு என்முன் வந்தருளவேண்டும். செந்நெற்பயிரும் தாமரையும் ஒன்றுபட்டு வளர்கின்ற திருச்செங்கோட்டில் அமர்ந்த பெருமிதமுடையவரே! அன்புடன் வந்து உமது பாத மலரைப் பணிந்து ஐம்பூதங்களும், ஒருமைபட்ட உம்மை நினையாமல், அன்புமிகுந்த நஞ்சு நிறைந்த கண்களும் தாமரை மொட்டுகள் போன்ற தனங்களும், பூங்கொத்துக்களும் நிரம்பி வண்டுகள் விளையாடுகின்ற கூந்தலும் படைத்த பொது மாதரை மனதில் கொண்டு நினைத்து நிறைபெற்ற அறியாமை நிறைந்து மனம்குன்றி ஒரு வழிப்படாது அலைச்சல் உறுவேனோ?

விரிவுரை

அன்பாக வந்து உன்றாள் பணிந்து:-

முருகனிடம் சென்று அன்போடு என்புருக வழிபட்டு வணங்குதல் வேண்டும்.

ஐம்பூதமென்ற நினையாமல்:-

இறைவனை மண், நீர், கனல், காற்று, விண் என்ற ஐம்பூதங்களும் ஒரு வழிப்பட நினைக்கவேண்டும். ஐம்பூதங்களும்