ஒன்றுபட்டிருப்பது, தான் லட்சுமியும் தனலட்சுமியும் ஒன்றுபட்டு காட்சியளிப்பது போல் திகழ்கின்றது. கருத்துரை திருச்செங்கோட்டு வேலவரே! அறியாமையால் அலையாவண்ணம் ஆண்டருள்வீர். பந்தாடி யங்கை நொந்தார் பரிந்து பைந்தார் புனைந்த குழல்மீதே பண்பார் சுரும்பு பண்பாடு கின்ற பங்கே ருகங்கொள் முகமீதே மந்தார மள்றல்சந்தார மொன்றி வன்பாத கஞ்செய் தனமீதே மண்டாசை கொண்டு விண்டாவி நைந்து மங்காம லுன்ற னருள்தாராய் கந்தா அரன்றன்மைந்தா விளங்கு கன்றா முகுந்தன் மருகோனே கன்றா விலங்க லொன்றாறு கண்ட கண்டா வரம்பை மணவாளா செந்தா தடர்ந்த கொந்தார் கடம்பு திண்டோள் நிரம்ப அணிவோனே திண்கோ டரங்க ளெண்கோ டுறங்கு செங்கோட மர்ந்த பெருமாளே. பதவுரை கந்தா-கந்தவேளே! அரன் தன் மைந்தா-சிவபெருமானுடைய திருப்புதல்வரே! விளங்கு-விளங்குகின்றவரும், கன்றா-கோபிக்காதவருமாகிய, முகுந்தன் மருகோனே-முகுந்தனுடைய மருகரே! கன்றா, கோபித்து, விலங்கல் ஒன்று ஆறு கண்ட-மலை ஒன்றை வழிதிறக்கச் செய்த, கண்டா-வீரரே! அரம்பை மணவாளா-தேவமாதாவாகிய தெய்வயானைக்கு நாயகரே! செம்தாது அடர்ந்த-செவ்விய பூந்தாது நிரம்பிய, கொந்து ஆர்-பூங்கொத்துக்கள் நிறைந்துள்ள, கடம்பு-கடப்பமலர் மாலையை, திண் தோள் நிரம்ப அணிவோனே-வலிய தோளின் மீது நிரம்பவுந் தரித்துக் கொள்பவரே! திண் கோடாரங்கள்-வலிமையுடைய குரங்குகள், எண்கோடு உறங்கும்-கரடிகளுடன் தூங்குகின்ற, செங்கோடு அமர்ந்த-திருச்செங்கோட்டில் எழுந்தருளி |