பக்கம் எண் :


12 திருப்புகழ் விரிவுரை

 

ஆராத காதல் வேடர் மடமகள்:-

ஆராத-தணியாத.முருகவேளுக்கு வள்ளிநாயகியாரிடம் தணியாத காதல் என்பது அவரை உய்விக்கும் பொருட்டு எழுந்த தயவைக் குறிக்கும்.

“பணியாவென வள்ளிபதம் பணியும்
   தணியா அதிமோக தயாபரனே”                         -அநுபூதி (6)

மடமகள் -மடமைக்குணம் பொருந்தியவர். மடம் என்பதற்கு அறியாமை என்று பொருள் கொள்வர்; அது பொருந்தாது, பெண்களுடைய நாற்குணங்களில் ஒன்று மடம், அது அறியாமையாயின் மகளிருக்கு அறியாமை ஒரு குணமாக அமையலாமா?

பின்னர், மடம்என்பதற்குக் கொளுத்தியது விடாமை என்பது பொருள். தாய் தந்தை, கணவன் ஆகியோர்களால் நல்லறிவு பெறக் கூறிக் கொளுத்தியது விடாமை எனப்படும்.

ஆராயுநீதி வேலும்:-

வேல் என்பது ஞானம். ஞாமே நீதியை ஆராய வல்லது. “அறத்தை நிலைகாணும்” என்றார் வேல்வகுப்பிலும்.

மெய்ஞ்ஞானாபி ராமதாப வடிவமும்:-

மெய்-உண்மை; ஞானம்-அறிவு; அபிராமம்-அழகு; அழகினால் விளைவது ஆனந்தம். காரியத்தைக் காரணமாகப் பேசப்பட்டது. இறைவன் சச்சிதானந்த சொரூபன்.

நாளும்நினைவது பெறவேண்டும்:-

இறைவனை யடைவதற்குச் சிறந்தவழி, பரம பிதாவை இடைவிடாது நினைப்பதுவே.

“நினையே தினம்நினைக்கவுந் தருவாய்” - (மனத்தி) திருப்புகழ்

“நினைப்பவர்மனங் கோயிலாகக் கொண்டவன்       -அப்பர்

மாறியாடும் இறையவர்:-

மதுரையில் அரசுபுரிந்த விக்கிரம பாண்டியனுடைய புதல்வன் இராஜசேகர பாண்டியன் இனிது அறநெறி வழுவாது அரசாண்டான். அவன் 64 கலைகளையும் உணர்ந்திருந்தனன். சோழநாட்டிலிருந்து வந்த ஒருவன்; தனது மன்னன் கரிகால் வளவன் 64 கலைகளிலும் வல்லவன் என்றனன்; அது கேட்ட பாண்டியன் தான் உணராதிருந்த 64ஆவது கலையாகிய பரதசாத்திரத்தைத் தக்காரைக் கொண்டு பழகினான்.

அப்போது தனக்கு ஏற்பட்ட கால்வலியை நோக்கி, “சிறிது நேரம் நாம் நடிப்பதற்கே கால்வலிக்கின்தே? நடராஜமூர்த்தி