பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 121

 

கன்றாமுகுந்தன்:-

கன்றுதல். கோபித்தல், கோபிக்காத காருண்யமூர்த்தி திருமால்.

கன்று ஆ முகுந்தன். கன்றுகளையும் பசுக்களையுங் காத்தவன் என்றும் பொருள்படும்.

முகுந்தன்-மு,முத்தி, கு.பூதலச் செல்வம், இகபர சித்திகளை வழங்குபவர் முகுந்தம்.

கன்றா விலங்கல் ஒன்றாறு கண்ட கண்டா:-

கன்றா-சினந்து. விலங்கல்-மலை. கிரவுஞ்சம்.

வீரவாகுதேவர் முதலியோர் அம்மலையில் சென்று மயங்க, முருகவேள் வேலால் பிளந்து வழியை உண்டாக்கி யருள் புரிந்தார்.

திண்கோடரங்கள் எண்கோடுறங்கு:-

கோடரம்-குரங்கு. எண்கு-கரடி, குரங்கு சாதுவானது. கரடி கொடியது. இரண்டும் ஒற்றுமைப்பட்டு உறங்குகின்றன. இறைவனுடைய சந்நிதியில் எல்லாம் ஒன்றுபடுகின்றன.

கருத்துரை

திருச்செங்கோட்டுத் திருமுருகா! ஆசையால் அடியேன் மங்காதவண்ணம் அருள்செய்வீர்.

143

வண்டார் மதங்க ளுண்டே மயங்கி
வந்தூரு கொண்ட    லதனோடும்
வண்காம னம்பு தன்கால் மடங்க
வன்போர் மலைந்த     விழிவேலும்
கொண்டே வளைந்து கண்டார்தியங்க
நின்றார் குரும்பை     முலைமேவிக்
கொந்தா ரரும்பு நின்தாள் மறந்து
குன்றாம லுன்ற     னருள்தாராய்
பண்டாழி சங்கு கொண்டாழி தங்கு
பண்போ னுகந்த      மருகோனே
பண்சார நைந்து நண்போது மன்பர்
பங்காகி நின்ற    குமரேசா
செகண்டாடி யண்டர் கொண்டாட மன்றில்
நின்றாடி சிந்தை     மகிழ்வாழ்வே
செஞ்சாலி மிஞ்சி மஞ்சாடுகின்ற 
செங்கோ டமர்ந்த    பெருமாளே.