விரும்பி, பூங்கொத்துக்கள் நிறைந்த உமது திருவடியை மறந்து அடியேன் அழியாதபடி உமது திருவருளைத் தந்தருளுவீராக. வண்டார்:- வண்டுகள்.அஃறிணையை உயர் திணையாக்க கூறினார். திணைவழுவமைதி. (நன்னூல் 379) “விரகின்மை கொண்டகுருகார்” - கந்தபுராணம் மதங்கள்:- மதம்-தேன் ‘மதங் கமழ் கோதை” (சிந்தாமணி) கொண்டால்:- கொண்டல்-மேகம். உவம ஆகுபெயராகக் கூந்தலைக் குறிக்கின்றது. கால்மடங்க:- கால்-செவவி. பண்டாழி சங்கு கொண்டாழி தங்கு பண்போன்:- பண்டு-பழமை.சக்கரமும் சங்கும் தாங்கி ஆழியில் துயின்ற திருமால். பண்சார நைந்து நண்போது மன்பர் பங்காகி நின்ற குமரேசா:- பண்-இராகம். நல்ல இசையுடன்பாடி உள்ளம் உருகும் அன்பர்களின் அருகில் நின்று முருகன் கருணை புரிகின்றான். செஞ்சாலிமிஞ்சி:- அருணகிரியார்திருச்செங்கோட்டைப் பாடுகின்ற போது பல இடங்களில் செந்நெல் விளையுந் திருத்தலம் என்றே குறிப்பிடுகின்றார். “செஞ்சாலி கஞ்சம் ஒன்றாய் வளர்ந்த செங்கோடு” -(அன்பாகவந்து) திருப்புகழ். “செகதல மிடிகெட விளைவன வயலணி செங்கோடு” -(கரையறவுருகு) திருப்புகழ். கருத்துரை திருச்செங்கோட்டுத் தெய்வமே! உமது திருவடியை மறவாத வரம் தந்தருள்வீர். கரையற வுருகுதல் தருகயல் விழியினர் கண்டான செஞ்சொல் மடமாதர் |