கலவியில் முழுகிய நெறியினி லறிவுக லங்காம யங்கும் வினையேனும் உரையை மறிவையும் உயிரையு முணர்வையும் உன்பாத கஞ்ச மலர்மீதே உரவொடு புனைதா நினைதரு மடியரோ டொன்றாக என்று பெறுவேனோ வரையிரு துணிபட வளைபடு சுரர்குடி வந்ததேற இந்த்ர புரிவாழ மதவித கஜரத துரகத பததியின் வன்சேனை மங்க முதுமீன திரைமலி சலநிதி முறையிட நிசிசரர் திண்டாட வென்ற கதிர்வேலா ஜெகதல மிடிகெட விளைவன வயலணி செங்கோடமர்ந்த பெருமாளே. பதவுரை வரை இரு துணிபட-கிரவுஞ்சமலை இருதுண்டாகும்படியும், வளைபடு சுரர்- விலங்கபட்டிருந்த தேவர்கள், குடிவந்து ஏற-தமது ஊரில் குடிபுகு மாறும், இந்ந்தரபுரி வாழ-தேவேந்திரனுடைய அமராவதி நகரம் வாழும் படியும், மதவித கஜரத துரகத பததியின்-மதம் பொழியும் யானை தேர் குதிரை காலாள் என்ற, வன்சேனை மங்க-வலிய சேனைகள் மங்குமாறும், முதுமீன-பழமையான மீன்கள் வாழும், திரைமலி-அலைகள் நிறைநத, சலநிதி முறை இட-சமுத்திரம் முறையிடுமாறும், நிசிசரர் திண்டாட-அசுரர்கள் துன்பமுறும்படியும், வென்ற கதிர்வேலா-வெற்றி பெற்ற ஒளி மிகுந்த வேலாயுதரே! ஜெகதல மிடிகெட- உலகத்தின் வறுமை தீரும்படி, விளைவன வயல் அணி-விளைகின்ற வயல்கள் அலங்கரிக்கின்ற, செங்கோடு அமர்ந்த-திருச்செங்கோட்டில் எழுந்தருளியுள்ள, பெருமாளே-பெருமையில் மிகுந்தவரே! கரை அற உருகுதல் தரு- எல்லையில்லாமல் உருகும்படிச் செய்யும், கயல் விழியினர்-மீன் போன்ற கண்ணினர், கண்டு ஆன செம்சொல்-கற்கண்டு போன்றசெவ்விய சொல்லினராகிய, மடமாதர்-பொதுமாதர்களின், கலவியில் முழுகிய நெறியினில்- சேர்க்கையாகிய மயல் வெள்ளத்தில் முழுகிய வழியினில், அறிவு கலங்காமயங்கும்-அறிவு கலங்கி மயங்கும், வினையேனும்-வினையையுடைய அடியேன், உரையையும், அறிவையும் உயிரையும் உணர்வையும், உன்பாத கஞ்ச மலர் மீது-உமது பாத தாமரை மலர் மீது, உரவொடு-உறுதியுடன், புனைதா நினைதரும்-அணிவிக்கக்கருதும், அடியரொடு ஒன்றாக என்று பெறுவேனோ- |