“துரும்பனேன் என்னினும் கைவிடுதல் நீதியோ தொண்டரொடு கூட்டுகண்டாய்” - தாயுமானார். வரையிருதுணிபட:- கிரவுஞ்சமலை என்பது சஞ்சித வினைத் தொகுதி. திரைமலி சலநிதி முறையிட:- கடலை முருகன்முனிந்தான் என்பது பிறவிப் பெருங்கடலை வற்ற வைத்தான் என்பதாகும். கருத்துரை திருச்செங்கோடு அமர்ந்த தேவனே! அடியாருடன் ஒன்றுபட்டு உய்யும்படி அருள்செய்வீர். இடம்பார்த் திடம்பார்த் திதங்கேட் டிரந்தேற் றிணங்காப் பசிப்பொங் கனல்மூழ்கி இறுங்காற் கிறுங்கார்க் கிரும்பார்க் குநெஞ்சார்க் கிரங் கார்க் கியற்றண் டமிழ்நூலின் உடம்பாட் டுடன்பாட் டியம்பாத் தயங்காத் துளங்காத் திடப்புன் கவிபாடி ஓதுங்காப் பொதுங்காப் பதுங்காப் புகன்றேத் துறும்பாற் திடப்புன் புறலாமோ கடந்தோற் கடந்தோற் றறிந்தாட்கருந்தாட் கணைந்தாட் கணித்திண் புயமீவாய் கரும்போற் கரும்போர்க் குளங்காட் டிகண்டேத் துசெங்கொட் டில்நிற்குங் கதிர்வேலா அடைந்தோர்க் குணந்தோர்க் களிந்தோர்க் கமைந்தோர்க் கவிழ்ந்தோர்க் குணற்கொன் ரிலதாகி அலைந்தோர்க் குலைந்தோர்க் கிளைந்தோர்க் கலந்தோர்க் கறிந்தோர்க் களிக்கும் பெருமாளே. பதவுரை கடம்-மதம்பொழியும், தோல்-யானை, கடம் தோற்ற-காட்டில் எதிர்ப்பட, அறிந்தாட்கு-அறிந்தவளாய், அரும் தாட்கு அணைந்தாட்கு, அருமையான திருவடியை அணைந்த வள்ளி நாயகிக்கு, அணி திண்புயம் ஈவாய்-அழகிய வலிய புயத்தைத் தந்தவரே! கரும்போற்கு அரும்போர்-கரும்பு வில்லை மன்மதனுக்கு அரிய போராக, குளம் காட்டி-நெற்றிக் |