பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 127

 

கண்காட்டிய சிவபெருமான், கண்டு ஏத்து-கண்டு போற்றும்-செங்கோட்டில் நிற்கும்-திருச்செங்கோட்டில் நிற்கின்ற, கதிர் வேலா-ஒளி மிகுந்த வேலவரே! அடைந்தோர்க்கு-உம்மைச் சரணம் என அடைந்தோர்க்கும், உணந்தோர்க்கு- மெலிந்தவர்க்கும், அளிந்தோர்க்கு கருணையுள்ளம் படைத்தோர்க்கும், அமைந்தோர்க்கு-மனஅமைதி கொண்டவர்க்கும், அவிழ்ந்தோர்க்கு-பக்தியால் உள்ளம் நெகிழ்ந்தவர்களுக்கும், உணற்கு ஒன்று இலது ஆகி அலைந்தோர்க்கு-உண்பதற்கு ஒன்றும் இல்லாதவராகி அலைகின்றவர்க்கும், உலைந்தோர்க்கு நிலைகுலைந்தவர்க்கும், இணைந்தோர்க்கு-கவலையால் வருந்துபவர்க்கும், அலந்தோர்க்கு-துண்பம் உற்றவர்க்கும், அறிந்தோர்க்கு- ஞானிகட்கும், அளிக்கும்-திருவருள் மாபலிக்கும், பெருமாளே-பெருமையிற் சிறந்தவரே! இடம் பார்த்து, இடம் பார்த்து-இடம் பார்த்து, இடம் பார்த்து, இதம் கேட்டு -இதமான மொழிகளை அவர்கள் கேட்கும்படிச் சொல்லி, இரந்தோர்க்கு-யாசிக்கின்ற அடியேனுக்கு, இணங்கா-யாசிப்பதற்கே மனம் பொருந்தி, பசி பொங்கு அனல் மூழ்கி-பொங்கி எழுகின்ற பசி நெருப்பில் மூழ்கி, இறும் காற்கு-அழிந்து போகும் காலத்தில் கூட, இறும்காக்கு-உள்ளம் உறுதியடையாதவரிடம், இருப்பார்க்கு நெஞ்சார்க்கு-இரும்பு போன்ற கடின நெஞ்சத்தவரிடம், இரங்கார்க்கு-இரக்கம் இல்லாதவரிடம், இயல் தண்தமிழ்நூலின்-தகுதி பெற்ற குளிர்ந்த தமிழ் நூல்களில், உடம் பாட்டுடன்- மன ஒருமையுடன், பாட்டு இயம்பா-பாடல்களை கூறி, தயங்கா-வாட்டமுற்று, துளங்கா-மனத்தில் கலக்கங் கொண்டு, திடபுன் கவிபாடி-உறுதியுடன் புல்லிய கவிகைப் பாடி ஓதும் காப்பு ஒதுங்கா-சொல்லப்பட்ட காவலுக்கு ஒதுங்கியும், பதுங்கா-பதுங்கியும், புகன்று ஒத்து உறும்பால்-தான் கூறிய பாடல்களை மறுபடியும் புகழும் இயல்பினைக் கொண்ட, குணக்கு அன்பு உறலாமோ- குணத்துக்கு நான் அன்பு வைக்கலாமோ?

பொழிப்புரை

மதம் பொழியும் யானை காட்டில் தோன்ற, அறிந்தவளாய், உமது அருமையான திருவடிகளை அணைந்த வள்ளிநாயகிக்கு அழகிய வலிய திருப்புயங்களைத் தந்தவரே! கரும்பு வில்லுடைய மன்மதனுக்கு அரிய போராக, நெற்றிக் கண்ணைக் காட்டிய சிவ பெருமான் கண்டு போற்றும் திருச்செங்கோட்டில் விளங்கி நிற்கும், ஒளி பெற்ற வேலாயுதரே! உம்மைத் தஞ்சமாக அடைந்தவர்க்கும், மெலிந்தவர்க்கும், கருணையுடையவர்க்கும், உள்ளம் நெகிழ்ந்தவர்க்கும், உணவு இன்றி அலைகின்றவர்க்கும், நிலையற்று அலைபவர்க்கும், கவலையால் வருந்துவோர்க்கும், துன்பம் உற்றவர்க்கும், ஞானிகட்கும் அருள்புரியும் பெருமிதம் உடையவரே! எங்கு