பக்கம் எண் :


128 திருப்புகழ் விரிவுரை

 

எவரிடம் போனால் பொருள் கிடைக்கும் என்று, இடம் பார்த்து இடம் பார்த்துப் போய் இதமான மொழிகளைச் சொல்லி யாசிக்கின்ற அடியேன், இணக்கமாக நடந்து, பசித்தீயில் முழுகி இறக்குந்தருவாயினும், உறுதியான உள்ளம் இன்றி, இரும்பு போன்ற கடின மனத்தவரிடம்-இரக்கம் இல்லாதவரிடம், இயலுடம் கூடிய இனிய தமிழ் நூலில், மன ஒருமைப்பாட்டுடன், பாடல்களைக் கூறியும், வாட்டமும் கலக்கமும் அடைந்து, திடத்துடன் புல்லிய கவிகளைப் பாடி சொல்லுகின்ற காவலுக்கு ஒதுங்கியும் பதுங்கியும், மறுபடியும் பாடல் சொல்லிப் புகழும் குணத்துக்கு அடியேன் அன்பு கொள்ளலாமோ?

விரிவுரை

இத்திருப்புகழில் சுவாமிகள் தமிழ்ப் புலவர்கள், பொருளுடையாரைப் புகழ்ந்து பாடி புன்மையுறும் அவல நிலையைக் கண்டிக்கின்றார்.

இடம் பார்த்து இடம் பார்த்து:-

“இன்று எங்கே போனால் பொருள் கிடைக்கும்? யாரிடம் போனால் பணம் கிடைக்கும்?” என்ற சிற்தித்துச் செல்லுவார்கள். இடம் பார்த்துஇடம் பார்த்துச் சென்று பாடுவார்கள்.

இரந்தேற்கு:-

இரந்தவரே இறந்தவர். இறந்தவர் இறந்தவரல்லர்.
மாய்ந்தவர் மாய்ந்தவ ரல்லர்கள்; மாயா
தேந்திய கைகொ டிரந்தவர் எந்தாய்
வீய்ந்தவர் என்பவர் வீய்ந்தவ ரேனும்
ஈய்ந்தவ ரல்ல திருந்தவர் யாரே.

உலகிலே எல்லாத் தொழிலும் இழிந்தவையல்ல; ஏற்பது ஒன்றே இகழ்ச்சி.

பசிப்பொங்கனல் மூழ்கி:-

பசித்தீ கொடிய அனலுக்கு நிகரானது. பசி வந்தால் மானங் குலங் கல்வி முதலிய பத்தும் பறந்து போகும்.

பசி வந்தபோது கண் பார்வை குறையும்; கை கால்கள் தள்ளாடும்; நாடி நரம்பு தளரும்; க்ஷயம், குஷ்டம், ஆஸ்துமா முதலிய நோய்கள் வந்தால்வல வருஷம் அவற்றுடன் போராடிக் காலந் தள்ளலாம்; பசி நோய் வந்தால் சில நிமிஷங்கள் கூட அதனைத் தாங்கிக் கொள்ளமுடியாது.

இறுங்காற் கிறுங்கார்க்கு:-

இந்தத் திருப்புகழில் சுவாமிகள் பதங்களை அமைத்திருக்கின்ற