அழகு மிக மிக வியப்பாக உளது. இருங் காற் கிறுங்கார்க் உடம்பாட்டுடன் பாட் ஒதுங் காப் பொதுங்கா கடற்தோற் கடந்தோற் கரும்போற் கரும்போர்க் இவை மிகவும் சமத்காரமான பிரயோகங்கள். இறும்கால்-அழிந்து போகும் காலம். இருகுதல்-உறுதி யடைதல். இருங்கார்க்கு-உள்ளம் உறுதியடையாதவர். தனக்கு அழிவு வந்த போதும், பக்தி ஞானம் எய்தி உறுதியை நாடாதவர்கள். இரும்பார்க்கு நெஞ்சார்க்கு:- இரும்பு போன்ற நெஞ்சு படைத்தவர்; ஏழை எளியவர்களிடத்தில் சிறிதும் கருணையின்றி இரும்பு மனத்துடன் இருப்பர். இரங்கார்க்கு:- பிறர் படுந்துன்பங்களைக் கண்டு உள்ளம் பச்சாத்தாபப் படாது இருப்பர். ஒதுங்காப் பொதுங்கா:- ஒதுங் காப்பு ஒதுங்கா. ஓதம் காப்பு என்ற சொல் சந்தத்துக்காக ஒதுங் காப்பு என் வந்தது. காவலர், “அப்படிபோ; இப்படி வா; என்று ஓதுவார்கள். குணக்கன் புறலாமோ:- குணத்துக்கு என்ற சொல் குணக்கு என வந்தது. நல்ல இனிய தமிழைக் கற்று, செந்தமிழால் இறைவனைப் பாடாது, காமதேனுவின் பாலைக் கமரில் விட்டதுபோல், இனிய தமிழை கொடாத லோபிகளைப் பாடி அவமாக்குவர். அந்தக் குணம் கூடாது என்று இங்கே அடிகளார் கூறுகின்றார். கடந்தோற் கடந்தோற்றறிந்தாள்:- கடம் தோல்கடம் தோற்ற அறிந்தாள். கடம்-மதம்; தோல்-யானை. கடம்- காடு. மதம் பொழியும் யானையாக விநாயகர் காட்டில் வர வள்ளியம்மை யஞ்சி இறைவனை அடைக்கலம் புகுந்த வரலாற்றை இது தெரிவிக்கின்றது. கரும்போர்க் கரும்போர்க்குளம்:- கரும்போன்-கரும்பு வில்லையுடைய மன்மதன். அவனுக்கு அரும் போராக. சிவபெருமான் நெற்றிக் கண்ணால் தண்டனை விதித்தார். குளம்-நெற்றிக் கண். |