பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 13

 

அனவரதம் ஓவாது நடிக்கின்றனரே? அவருக்கும் திருவடி வருந்துமே? தாண்டவத்தை நிறுத்தச் சொன்னால் உலகம் நடைபெறாதழியும். ஆதலின் கால் மாறியாடுமாறு பெருமானை வேண்டிக்கொள்வோம்” என்று எண்ணி, திருவாலயம் போய், வெள்ளியம்பலத்துள் ஆடும் விரிசடைக் கூந்தனைக் கண்டு வணங்கிக் கால்மாறியாட வேண்டினான்.

நின்றதா ளெடுத்து வீசி யெடுத்தாள் நிலமீ தூன்றி
இன்று நாங் காணமாறி யாடி என் வருத்தமெல்லாம்
பொன்றுமா செய்தி யன்றேல் பொன்றுவ லென்னா அன்பின்
குன்றனான்சுரிகை வாண்மேற் குப்புற வீழ்வேன் என்னா.

அரசன் வேண்டி உயிர்விடத் தொடங்கலும், பெருமான் வலக்காலைத் தூக்கித் திரு நடனம் புரிந்தருளினார்.

வான் மாறினும்மொழி மாறாத மாறன் மனங்களிக்கக்
கான்மாறி யாடிய கற்பகமே நின் கருணை யென்மேற்
றான்மாறினும்விட்டு நான் மாறிடேன் பெற்ற தாய்க்கு முலைப்
பான்மாறி னும்பிள்ளை பான்மாறு மோ அதிற் பலிடுமே. -அருட்பா

ஏழேழுபேர்கள்........விதிசெய்தலீலா :-

சங்கப்புலவர் கலகந் தீர்த்த வரலாறு

“தென்னாடுடைய சிவனே போற்றி
   எந்நாட்டவர்க்கும்இறைவாபோற்றி”

என்ற மணிவாசகத்தால் புகழ் பெற்ற தென்றமிழ்நாட்டின் தலைநகர் மதுரை. அதன் பெருமை எம்மால் அளக்கற்பாற்றோ?

“சிவக்ஷேத்ரோத்தமமிதி ஸ்ரீமத் ஹாலாஸ்யமித்யபி!
   ஸமஷ்டி வித்யா நகரீ மதுராபுரமித்யபி!
   பூலோக சிவலோகஞ்ச ஜீவன் முக்திபுரந்ததா!
   சதுஷ்கூடகூடபுரஞ்சேதி த்வாதசாந்தம் விதுர்ப்புதா”

என்று அகத்திய சங்கிதையால் புகழ்பெற்று பூலோக கயிலாசம்போல் இன்றும் என்றும் கண்ணுங் கருத்துக்கும் அடங்காத கவினுடன் திகழ்வது மதுரை.

அம்மதுரைமா நகரத்தை வம்சசேகர பாண்டியனது புதல்வன் வம்ச சூடாமணி என்னும் பாண்டியன் அரசு புரிவானாயினான். நாள்தோறும் அம்மன்னர் பெருமான் சண்பகமலர்கள் கொண்டு சோமசுந்தரப் பெருமானை யருச்சிக்கும் நியமம் பூண்டிருந்தனன். அதனால் அவற்குச் சண்பக பாண்டியன் என்னும் பேரும் போந்தது. அறநெறி வழாது அவன் அரசு புரியுங்கால் கிரக நிலை மாற்றத்தால் மழையின்றி, மக்கள் தடுமாற்றமடைந்தனர். பன்னிரு வருடம்