பக்கம் எண் :


130 திருப்புகழ் விரிவுரை

 

அடைந்தோர் குணந்தோர்க் களிந்தோர்க் கமைந்தோர்க் கவிழ்ந்தோர்க் குணற்கொன்றிலதாகி அலைந்தோர்க் குலைந்தோர்க் கிளைந்தோர்க் கலந்தோர்க் கறிந்தோர்க் களிக்கும்:-

சரணமடைந்தவர்; மெலிந்தவர்; இரக்கமுள்ளவர்; உள்ளம் நெகிழ்ந்தவர்; அமைதியுள்ளவர்; உணவின்றி அலைபவர்; உலைபவர்; துன்பத்தால் துடிப்பவர்; வருத்தமுள்ளவர்; அறிஞர்கள்; ஆகிய அனைவர்க்கும் முருகப் பெருமான் அருள் பாலிக்கின்றார்.

கருத்துரை

திருச்செங்கோட்டுத் திருமுருகா! மனிதனைப் பாடாத வரம் அருள் செய்வீர்.

146

கலக்குங் கோதற வடிக்குஞ் சீரிய
கருப்பஞ் சாறெனு     மொழியாலே
கருத்தும் பார்வையு முருக்கும் பாவிகள்
கடைக்கண் பார்வையி     லழியாதே
விலக்கும் போதக மெனக்கென் றேபெற
விருப்பஞ் சாலவு    முடையேனான்
வினைக்கொண் டேமன நினைக்குந் தீமையை
விடற்குஞ் சேலென    அருள்வாயே
அலைக்குந்தானவர் குலத்தின் சேனையை
அறுக்குங் கூரிய      வடிவேலா
அழைத்துன் சீரிய கழற்செந் தாமரை
யடுக்கும் போதக     முடையோராம்
சிலர்க்கன் நேகதி பலிக்குந் தேசிக
திருச்செங் கோபுர     வயலூரா
திதிக்கும் பார்வயின் மதிப்புண்டாகிய
திருச்செங் கோடுறை    பெருமாளே.

பதவுரை

அலைக்கும் தானவர் குலந்து-தேவர் முதலிய சாதுக்களை அலைத்து வருத்திய அசுரர்களின் குலத்துவந்த, சேனையை அறுக்கும்-சேனைக் கூட்டங்களை அறுத்த, கூரிய வடிவேலா-கூர்மை பொருந்திய வடிவேலவரே! அழைத்து-அன்புடன் அழைத்து! உன் சீரிய கழல் செம் தாமரை அடுக்கும்- உமது சிறந்த செந்தாமரை போன்ற திருவடிகளைப் பற்றியுள்ள, போதகம் உடையோராம்-ஞானத்தையுடையவர்களாகிய,