பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 131

 

சிலர்க்கு-சிலருக்கு, அன்றே கதி பலிக்கும்-அப்பொழுதே வீடு பேற்றினைத் தந்தருளும், தேசிக குருமூர்த்தியே! திருசம்கோபுர வயலூரா-அழகும் செவ்வையும் உடைய கோபுரம் அமைந்த வயலூராண்டவரே! திதிக்கும் பார்வையின்-தேவரீர் காத்தருளும் இந்த பூமியிடத்தே, மதிப்பு உண்டாகிய மதிப்பு ஓங்கியுள்ள, திருச்செங்கோடு உடை-திருச்செங்கோட்டில் வாழ்கின்ற, பெருமாளே-பெருமையிற் சிறந்தவரே! கலக்கும் கோது அற-கலக்கத்தைத் தரும் சக்கைகள் நீங்க, வடிக்கும் சீரிய கருப்பம் சாறு எனும் மொழியாலே- வடித்தெடுத்த சிறந்த கரும்பின் சாறு போன்ற மொழியினால், கருத்தும் பார்வையும் உருக்கும் பாவிகள்-உள்ளத்தையும் பார்வையையும் உருக்குகின்ற, பாவிகளாகிய பொது மாதர்களின், கடைகண் பார்வையில் அழியாதே- கடைக்கண் பார்வையினால் அடியேன் அழியாதவாறு, விலக்கும் போதகம்- அறியாமையை விலக்கவல்ல ஞானோபதேசத்தை, எனக்கு என்றே பெற- அடியேனுக்கு என்றே பெறுமாறு, விருப்பம் சாலவும் உடையேனான்-மிகவும் அன்பு கொண்டுள்ள அடியேன், வினை கொண்டே-ஊழ்வினையின் பயனாக, மனம் நினைக்கும் தீமையை விடற்கு-மனதில் தீயகுணங்களை விட்டு உய்யும் பொருட்டு, அஞ்சேல் என அருள்வாயே-அஞ்சேல் என்று கூறி என்னைக் காத்தருளுவீராக.

பொழிப்புரை

தேவர்கள் முதலிய நல்லோர்கள் அலைக்கழித்த அசுர குலுத்துச் சேனைகளை அழித்த கூரிய வடிவேலவரே! உமது செந்தாமரை போன்ற திருவடியைச் சார்ந்து சிவஞானமுடைய சிலரை அழைத்து அப்பொழுதே முத்தி நலத்தை வழங்கியருளும் குருநாதரே! அழகிய சிறந்த கோபுரம் விளங்கும் வயலூர் அரசே! தேவரீர் காத்தளிக்கும் இப்பூமியில் மதிப்பு மிகுந்த திருச்செங்கோட்டில் வாழும் பெருமித முடையவரே! கலக்கத்தைத் தரும் சக்கைகள் நீங்க, வடித்து எடுத்த சிறந்த கருப்பஞ்சாறு போன்ற இனிய மொழியால், உள்ளத்தையும், பார்வையையும் உருக்குகின்ற பாவிகளாகிய பொதுமாதர்களின் கடைக்கண் பார்வையினால் அடியேன் அழியாதபடி, அறியாமையை விலக்கும் ஞானோபதேசத்தை, “அடியேனுக் கென்றே பெறும்படி, மிகவும் விருப்பங்கொண்டுள்ள அடியேன், ஊழ் வினையினால் மனத்தில் நினைக்கின்ற தீய குணங்களை விட்டு உய்யும் படி அஞ்சேல்” என்ற கூறி அருள்புரிவீராக

விரிவுரை

கலக்குங் கோதற வடிக்குஞ்சீரிய கருப்பஞ்சாறெனு மொழியாலே:-