துஞ்சு கோட்டிச் சுழற்கண் காட்டிக் கொங்கை நோக்கப் பலர்க்குங் காட்டிக் கொண்ட ணாப்பித் துலக்கஞ் சீர்த்துத் திரிமானார் தொண்டை வாய்ப்பொற் கருப்பஞ் சாற்றைத் தந்து சேர்த்துக் கலக்குந் தூர்த்தத் துன்பவாழ்க்கைத் தொழிற்பண்டாட்டத் துழலாதே கஞ்சம் வாய்த்திட்ட வர்க்குங் கூட்டிக் கன்று மேய்த்திட்ட வாக்குங் கூற்றைக் கன்ற மாய்த்திட் டவர்க்குந் தோற்றக் கிடையாநீ கண்டு வேட்டுப் பொருட்கொண்டாட்டத் தின்ப வாக்யத் தெனக்குங் கேட்கத் தந்து காத்துத் திருக்கண் சாத்தப்
பெறுவேனோ வஞ்ச மாய்ப்புக் கொளிக்குஞ் சூற்கைத் துன்று சூர்ப்பொட்டெழச்சென் றோட்டிப் பண்டுவாட்குட்களிக்குந் தோட்கொத் துடையோனே வண்டு பாட்டுற் றிசைக்குந் தோட்டத் தண்கு ராப்பொற் புரக்கும் பேற்றித் தொண்டர்கூட்டத்திருக்குந் தோற்றத் திளையோனே கொஞ்சு வார்த்தைக் கிளித்தண் சேற்கட் குன்ற வேட்டிச் சியைக்கண் காட்டிக் கொண்டுவேட்டுப் புனப்பைங் காட்டிற் புணர்வோனே கொங்கு லாத்தித் தழைக்குங் காப்பொற் கொண்ட லார்த்துச் சிறக்குங் காட்சிக் கொங்கு நாட்டுத் திருச்செங்கோட்டுப் பெருமாளே. பதவுரை வஞ்சம் ஆய் புக்கு ஒளிக்கும்-வஞ்சகமாகப் புகுந்து ஒளிக்கும், சூல்கை- சூலம் ஏந்திய கையையுடைய, துன்று சூர்பொட்டு எழ-நெருங்கிய சூரபன்மன் அழியும்படி, சென்று ஓட்டி-போர்க்களஞ் சென்று அவனை ஓட வைத்து, பண்டு வாட்கு உள் களிக்கும்-முன்னாள் வாளாயுதத்துள் செலுத்தி மகிழும், தோள் கொத்து உடையோனே-கொத்தாக தோள்களையுடையவரே! வண்டு பாட்டு உற்று இசைக்கும்-வண்டு பொருந்திய பாடல் பாடும், தோட்ட-தோட்டத்தில் |