பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 135

 

சென்று இசைபாடும், சோலையில் மலரும் குளிர்ந்த குராமலர் அணிந்த அழகிய திருமார்பையுடையவரே! கூட்டமாகக்கூடிய அடியார்களின் சபை நடுவில் காட்சியளிக்கும் இளம் பூரணரே! கொஞ்சும் கிளிபோன்ற சொற்களை யுடையவரும், குளிர்ந்த சேல் மீன்போன்ற கண்களையுடையவரும், மலையில் வாழ்பவருமாகிய வள்ளி பிராட்டியாரைக் கண்காட்டி அழைத்துக் கொண்டு போய், வேடர்களின் தினைப்புனம், உள்ள கானகத்தில் தழுவிக் கொண்டவரே! வாசனை வீசிப் பரப்பித் தழைக்கின்ற சோலைகளில் மேகங்கள் நிறைந்து சிறக்குங் காட்சியுடைய கொங்கு நாட்டில் விளங்கும் திருச்செங்கோட்டில் வாழும் பெருமிதம் உடையவரே! சோர்வுற்றது போல் கண்களைச் சுழற்றிக் கொண்டுபோய் ஏமாற்றித் தங்கள் பெருமை ஓங்கத் திரிகின்ற பொது மாதர்களின், கொவ்வைக்கனி போன்ற வாயிதழின் கரும்புச் சாறு போன்ற இனிமையைத் தந்து மறுவுகின்ற கொடிய துன்ப வாழ்க்கைத் தொழிலாகிய பழைய ஆட்டங்களில் அடியேன் சுழன்று திரியாமல், தாமரை மலரில் வாழும் பிரம தேவனுக்கும், ஒன்றுபடுத்திப் பசுவின் கன்றுகளை மேய்யத்த திருமாலுக்கும் இயமனை பாடும்படிமாய்ந்த சிவமூர்த்திக்கும் காண்பதற்கு அரியவரான தேவரீர், அடியேனை ஒரு பொருளாகக் கருதி என்னைக் கண்டு விரும்பி, கொண்டாடத்தக்க பொருள் அமைந்த இன்ப உபதேச வாக்கியத்தை அடியேன் கேட்டு உணரும்படி திருக்கண்ணோக்கம செய்யும் பெரும் பேற்றினை அடியேன் பெறுவேனோ?

விரிவுரை

துன்ப வாழ்க்கைத் தொழிற்பண்டாட்டத் துழலாதே:-

ஆசாபாசத்தில் சிக்கிக் கொண்டாட்டம் என்ற துன்பத்தினால் துடித்து வாடுவது மாந்தர் இயல்பு.

கஞ்சம் வாய்த்திட்டவர்க்கும் கூட்டிக் கன்று மேய்த்திட்டவர்க்கும் கூற்றைக் கன்ற மாய்த்திட்டவர்க்குந் தோற்றக் கிடையாநீ கண்டுவேட்டு:-

இந்த அடியில் முருகப் பெருமானுடைய பரத்துவங் கூறப்படுகின்றது.

பிரமதேவனுக்கும் திருமாலுக்கும், உருத்திர மூர்த்திக்குங் காணக் கிடையாதவர். இங்கு வரும் உருத்திரன் என்பவர் மூவரில்