பக்கம் எண் :


136 திருப்புகழ் விரிவுரை

 

ஒருவர்; சிவம்வேறு, உருத்திரர் வேறு, அயன், அரி அரன் என்ற மூவருக்கும் அரியர் முருகர்.

“இத்தகைய மூவர்க்குங் கிடையாத நீர் சிறியவனாகிய அடியேனை வலியவந்து கண்டு, என்னை விரும்பியாட் கொள்ள வேண்டும்” என்று சுவாமிகள் மிகவும் உருக்கமாக விண்ணப்பஞ் செய்கின்றார்.

பொருட் கொண்டாட்டத் தின்ப வாக்யத் தெனக்குங் கேட்கத் தந்துகாத்து:-

“கொண்டாடத்தக்க பொருள் அமைந்த இன்ப உபதேச வாக்கியத்தை அடியேனுங் கேட்டு உய்யும்படி உபதேசித்து தந்துருளுவீர்.

இந்தப்பாடலில் சுவாமிகள் விண்ணப்பித்தவாறு, முருகன் அவருக்கு உபதேசித்தருளினார்.

தேனென்று பாகென்றுவமிக் கொணா மொழித் தெய்வ வள்ளிக்
கோனன் றெனக்குப தேசித்த தொன்றுண்டு கூறவற்றோ
வானன்று காலன்று தீயன்று நீரன்று மண்ணுமன்று
தானன்று நானன்று அசரீரின்று சரீரியன்றே.
                                                         - கந்தரலங்காரம் (9)

திருக்கண் சாத்தப் பெறுவேனோ:-

“முருகா! உமது திருக்கண்ணால் அடியேனை நோக்கி அருள்புரியும்” என்று இப்பாடலில் வேண்டுகின்றார். இந்த விண்ணப்பத்தின் படியே முருகன் அருணகிரிநாதரை அருட் கண்ணால் நோக்கி ஆட்கொண்டார்.

“கனகத்தினு நோக்கினிதாயடி
   யவர்முத்தமிழாற் புகவே பர
   கதிபெற்றிட நோக்கிய பார்வையு மறவேனே”
                                           - (சதுரத்தரை-திருப்புகழ்)

தொண்டர் கூட்டத்திருக்குந் தோற்றத் திளையோனே:-

அடியார்களின்திருக்கூட்டத்தில் முருகவேள் இருந்து அருள்புரிவார்.

“பத்தர் கணப்ரிய நிர்த்த நடித்திகு
   பட்சிந டத்திய குக‘                         - திருப்புகழ்.

கருத்துரை

திருச்செங்கோட்டுத் திருமுருகா! அடியேனுக்கு அருள் உபதேசம் புரிந்து அருட் கண்ணோக்கஞ் செய்தருள்வீர்.