நீலமஞ் சானகுழல் மாலைவண் டோடுகதி நீடுபந் தாடுவிழி யார்பளிங் கானநகை நீலபொன் சாபநுத லாசையின் தோடசையு நீள்முகந் தாமரையி னார்மொழிந் தாரமொழி நேர்சுகம் போலகமு கானகந் தாரர்புய நேர்சுணங் காவிகளையேர்சிறந் தார்மலையி ரண்டுபோல் நீளிடங் கோடிளநிர் தேணிருந் தாரமுலை நீடலங் காரசார மோடடைந் தார்மருவி நீள்மணஞ் சாறுபொழி யாவளம் போதிலையி னீலவண் டேவியநல் காமனங் காரிநிறை நேசகந் தான அல்குல் காமபண் டாரமுதை நேருசம் போகரிடை நூலொளிர்ந் தாதையுயிர் சம்பையாரஞ் சாலுபொன் தோகையமை பாளிதஞ் சூழ்சரண தாள்சிலம் போலமிட வேநடந் தானநடை சாதிசந் தானெகின மார்பரந் தோகையென தானெழுங் கோலவிலை மாதரின் பார்கலவி தானுகொண் டேகலிய நோய்கள்கொண் டேபிறவி தானடைந் தாழுமடி யேனிடஞ் சாலும்வினை யஞ்சியோடத் தார்கடம் பாடுகயல் பாதசெந் தாமரைகள் தாழ்பெரும் பாதைவழி யேபடிந் தேவருகு தாபம்விண் டேயமுத வாரியுண் டேபசிகள் தாமுந் தீரதுகிர் போனிறங் காழ்கொளுரு சாரவுஞ் சோதிமுரு காவெனுங் காதல்கொடு தானிருந்தோதஇரு வோரகம் பேறுறுக விஞ்சைதாராய் சூலியெந் தாய்கவுரி மோகசங் காரிகுழை தோடுகொண் டாடுசிவ காமசந் தாரிநல |