தூளணைந் தாளிநிரு வாணியங் காளிகலை தோகைசெந் தாமரையின் மாதுநின் றேதுதிசெய் தூயஅம் பாகழைகொள் தோளிபங் காளக்ருபை தோய்பரன் சேயெனவு மேபெரும் பார்புகழும் விந்தையோனே சூரசங் காரசுரர்லோகபங் காவறுவர் தோகைமைந் தாகுமர வேள்கடம் பாரதொடை தோளகண் டாபரம் தேசிகந் தாவமரர் தோகைபங் காஎனவெ தாகமஞ் சூழ்சுருதி தோதகம் பாடமலை யேழுதுண் டாயெழுவர் சோரிகொண் டாறுவரவேலெறிந் தேநடன முங்கொள்வேலா மாலியன் பாறவொரு ஆடகன் சாகமிகு வாலியும் பாழிமர மோடுகும் பாகனனு மாழியுங் கோரவலி ராவணன் பாறவிடு மாசுகன் கோலமுகி லோனுகந் தோதிடையர் மாதுடன் கூடிவிளை யாடுசம் போகதிரு மார்பகன் காணமுடி யோனணங் கானமதி யொன்றுமானை மார்புடன் கோடுதன பாரமுஞ் சேரஇடை வார்துவண் டாடமுக மோடுகந் தீரரச வாயிதங் கோதிமணி நூபுரம் பாடமண வாசைகொண் டாடுமயி லாளிதுங் காகுறவி மாதுபங் காமறைகு லாவுசெங் கோடைநகர் வாழவந் தாய்கரிய மாலயன் தேவர்புகழ் தம்பிரானே. பதவுரை சூலி-சூலத்தை யேந்தியவள், எம்தாய்-எங்கள் அன்னை, கவுரி- பொன்னிறமுடையவள், மோக சங்காரி-ஆசையை யறுப்பவள், குழை தோடு கொண்டு ஆடு-குழையும் தோடும் பூண்டு நடனஞ் செய்கின்ற, சிவகாமசுந்தரி- சிவத்தை விரும்புகின்ற அழகி, நலதூள் அணைந்து ஆளி - நல்ல விபூதியணிந்து ஆள்பவள், நிருவாணி-திகம்பரி, அம்காளி-அழகிய காளி, கலைதோகை-கலைமகளும், செம் தாமரையின் மாது-சிவந்த தாமரையில் வாழுகின்ற இலக்குமியும், நின்றே துதி செய்-நின்று |