துதிக்கின்ற, தூய அம்பா-பரிசுத்தமான அன்னை, கழை கொள் தோளி-மூங்கில் போன்ற தோள்களையுடையவளாய் விளங்கும் தேவியை, பங்காள-பங்கில் உடையவராய், க்ருபை நோய் பரன்-கருணை நிறைந்த சிவபெருமானுடைய, சேய் எனவும்-திருக்குமாரர் என்று பெரும் பார்புகழும் - பெரிய உலகம் புகழ்கின்ற, விந்தையோனே-விசித்திரமுடையோனே! சூர சங்கார-சூளை சங்கரித்தவரே! சுராலோக பங்கா-தேவலோகத்துக்கு வேண்டியவரே! அறுவர் தோகை மைந்தா-ஆறு கார்த்திகைப் பெண்களின் புதல்வரே! குமரவேள்- குமரவேளே! கடம்பு ஆர தொடை தோள-கடப்ப மலர் நிறைந்த மாலையணிந்த அழகரே! அமரர் தோகை பங்கா என-தேவகுமாரியாகிய தெய்வயானையின் கணவரேயென்று, வேதாகமம் சூழ்-வேதாகமங்கள் ஆய்ந்த தேவர்கள், கருதி-முறையீடு, தோதகம் பாட-தங்கள் வருத்தத்தை எடுத்துகூற; மலை ஏழு துண்டாய்-ஏழுமலைகளும், துண்டாகிப் பொடிபட, எழுவர்- அம்மலைகளிலிருந்து எழுந்த அசுரர்கள், சோரி கொண்டு ஆறுவர-உதிரம் ஆறாகப் பெருகிவர, வேல் எறிந்தே-வேலாயுதத்தை விடுத்து, நடனமும் கொள்-நடனஞ் செய்த வேலா-வேலாயுதத்தையுடையவரே! மாலியன் பாற- மாலியவான் சாகவும்-ஒரு ஆடகன் சாக-ஒப்பற்ற இரணியன் இறக்கவும், மிகு வாலியும்-வலி மிகுந்த வாலியும், பாழிமரமோடு-பருத்த மரமும், கும்பாகனனும்- கும்பகர்ணனும், ஆழியும்-கடலும், கோர வலி ராவணன் பாற விடும்- பயங்கரமான வலிமை கொண்டிருந்த இராவணனும் இறக்குமாறு விடுத்த, ஆசுகன்-அம்பினையுடையவரும், கோல முகிலோன்-அழகிய மேக நிறத்தினனும், உகந்து ஓது இடையர் மாதுடன் கூடி-மகிழ்ச்சியுடன் துதிக்கின்ற ஆயர் குலமாதர்களுடன் சேர்ந்து, விளையாடு சம்போக-விளையாடி மருவியவரும், திருமார்பகன் இலக்குமியை மார்பில் கொண்டவரும், காணமுடியேன்-பொன் முடியினரும் ஆகிய திருமாலின் அணங்கு ஆன- புதல்வியாகிய, மதி ஒன்றும் ஆனை-அறிவு பொருந்திய தெய்வயானையின், மார்புடன்-திருமார்பும், கோடு தனபாரமும்-சேர-மலைபோன்ற தனபாரமும் பொருந்த, இடைவார் துவண்டாட-இடையின் நுண்மை நெகிழ்ந்து அசையவும், முகமோடு உகந்து-அவருடைய திருமுகத்தில் மகிழ்ச்சியுற்று, ஈரரச- கருணாரசத்துடன், வாய் இதம் கோதி-வாயிலிருந்துவரும் இனிமையை அனுபவித்து, மணிநூபுரம் பாட-இரத்தினச் சிலம்பு ஒலிக்க, மண ஆசை கொண்டாடும் மயிலாளி-அவரை மணக்கும் காதலைப் பாராட்டும் மயில் வாகனரே! துங்கா-தூயவரே! குறிவ மாதுபங்கா-வள்ளியம்மையின் கணவரே! மறை குலுாவு-வேதம் முழங்கும், கெங்கோடை நகர் வாழ வந்தாய்- திருச்செங்கோட்டு நகரில் வாழ வந்தவரே! கரியமால் அயன் தேவர் புகழ்-கரிய நிறமுள்ள திருமாலும் |