பக்கம் எண் :


14 திருப்புகழ் விரிவுரை

 

பஞ்சத்தால் உலகம் வாடியது. அது காலை ஆங்காங்குள்ள தமிழ்புலவர்கள் பசியால் வருந்தி ஒருங்கு கூடி பாண்டியனை யடுத்தனர். பாண்டியன் அவர்களை அன்னைபோல் ஆதரித்துப் போற்றினன்.

பின்னர் மன்னன்அச்சங்கப் புலவர்களை அன்புடன் நோக்கி, “முத்தமிழ்வல்ல உத்தமசீலர்களே! இங்ஙனே எஞ்ஞான்று மிருந்து அமிழ்தினு மினிய தமிழ் நூல்களை யாய்மின்” என்றனன். புலவர் “புரவலரேறே” ஐந்திலக்கணங்களுள் பொருள் நடுநாயகமாக மிளிர்வது. எழுத்தும் சொல்லும் யாப்பும் அணியும் பொருள் மாட்டன்றே? அப்பொருள் நூலின்றி யாங்கள் எவ்வாறு ஆய்வோம்?” என்று வருந்திக் கூறினார்கள். அரசன் ஆலவாயண்ணல் ஆலயத்தேகி, “தேவ தேவா! இக்குறையை தேவரீரே நீக்கியருளல் வேண்டும்; தமிழும் தமிழ்நாடும் தழைக்கத் தன்னருள்புரிவீர்.” என்று உள்ளம் உருகிக் கண்ணீர் வெள்ளம் பெருக முறையிட்டனன். அன்பர் கருத்தறிந்து அருளும் எம் சொக்கலிங்கப் பெருமான், இறையனார் அகப்பொருள் என்னும் பொருள் நூலையருளிச் செய்து பீடத்தின் கீழ் வைத்தருளினார்.

வடமொழி பாணினியாற்செய்த வியாகரணத்தையுடைத்து; அப்பாணியினினும் பல்லாயிரமடங்கு மகத்துவ முடையவரும், கரத்தைச்சிறிது கவிழ்த்தலால் விந்தகிரியையும், நிமிர்த்தலால் ஏழ்கடலையும் அடக்கிய பேராற்றலும் பெருந்தவமுமுடையவருமாகிய அகத்திய முனிவரால் செய்யப் பெற்ற இலக்கணமே யன்றி, சிவமூர்த்தியார் செய்தருளிய இலக்கணத்தையும் உடையது இத்தமிழ் எனின் இதன் பெருமையையும் அருமையையும் அளக்க வல்லவர் யாவர்? அதனைத் தாய் மொழியாகக் கொண்ட எமது புண்ணியப் பேற்றைத்தான் அளக்க முடியுமோ?

“அன்பி னைந்திணைக்களவெனப்படுவ
   தந்தண ரருமறை மன்ற லெட்டினுட்
   கந்தருவ வழக்க மென்மனார் புலவர்”

என்ற சூத்திர முதலாக அறுபது சூத்திரங்களை யுடையது இறையனார் அகப்பொருள். திருவலகிடச் சென்ற அந்தணர் அதனைக் கண்டு எடுத்தேகி அரசனிடம் அளித்தனர். அவன் அளவற்ற மகிழ்ச்சியை யடைந்து, அதன் பொருள் எளிதில் விளங்காமையின் புலவர்களை நோக்கி, “இதற்கு உரை செய்மின்” என்று வேண்டினன். அங்ஙனமே நக்கீரர், கபிலர், பரணர் முதலிய நாற்பத்தொன்பதின்மரும் உரை செய்தனர். பிறகு அவர்களுக்குள்