பக்கம் எண் :


140 திருப்புகழ் விரிவுரை

 

பிரமனும் தேவர்களும் புகழ்கின்ற! தம்பிரானே-தனிப்பெருந்தலைவரே! நீல மஞ்சு ஆனகுழல்-கரிய மேகம் போன்ற கூந்தலில் உள்ள, மாலை வண்டு ஓடு கதி-வண்டுகள் மொய்க்கின்ற நிலையும், பந்து ஆடு-பந்தாடுவது போல் அங்கும் இங்கும் புரள்கின்ற, நீடுவிழியார்-நீண்ட கண்களையுடையவர்கள், பளிங்கு ஆன நகை-பளிங்கு போன்ற வெண்மையான பற்களும், நீல பொன் சாபநுதல்-கரிய அழகிய வில்போன்ற புருவமும், ஆசையின் தோடு அசையும்- பொன்தோடு அசைகின்ற, நீள்முகம் தாமரையினர்-ஒளிநீளுகின்ற தாமரை போன்ற முகத்துடன் விளங்குபவர்கள், மொழ்ந்து ஆரமொழி சுகம் போல-நேர் பேசி நிறையும் பேச்சுக்கள் கிளியின் மொழியை நிகர்ப்பவர்கள், கமுகு ஆன கந்தாரர்-பாக்கு போன்ற கழுத்தினர், புயம் நேர்-தோள்கள் பொருந்திய, சுணங்கு-தேமலோடு, ஆவி-வாசனை கொண்டு, கிளைஏர் சிறந்தார்-மூங்கிலின் அழகைக் கொண்ட சிறப்பினர்கள், மலை இரண்டு போல-இரண்டு மலைகள் போலவும், நீளியங்கோடு-நீண்ட யானைக் கொம்பு, இளநீர்-இளநீர் தேன் இருந்த ஆர முலை-தேன் போன்று இனிக்கும் முத்துமாலை யணிந்த கொங்கையர், நீடு அலங்கார சரமோடு அடைந்தார்-நீண்ட அலங்காரமான கழுத்து அணியுடன் கூடியவர்கள், மருவி நீள்மணம் சாறு பொழி அவளம்- மிகுந்த நறுமணம் பொருந்திய கலவைச் சந்தனம் உள்ள அந்த வள்ளம் போன்ற வயிற்றினர்; போது இவையின் நீலவண்டு ஏவிய-மலர்க்கணைகளுள் நீலோற்பல பாணத்தை ஏவிய, நல்காமன் அங்காரம் நிறை-நல்ல மன்மதனுடைய அகங்காரம் நிறைந்ததும், நேச சந்தான-அன்புள்ள சந்ததியைத் தருகின்றதுமான, அல்குல் காமபண்டார அமுதை நேரும் சம்போகர்- அல்குலாகிய காம ரீதியான அமுதத்தைத் தருகின்ற சம்போகத்தினர்; இடை நூல் ஒளிர்ந்து-இடையானது நூல் போல மெல்லியதாய் விளங்கி, ஆசை உயிர் சம்பை யார் திசைகளில் வாய்விட்டு மின்னும் மின்னலைப்போன்றவர்கள், அம்சாலும் பொன் தோகை அமை-அழகு நிறைந்த பொன் சரிகையிட்ட முன்தானையமைத்த, பாளிதம் சூழ் சரணதாள்-பட்டுப்புடவை சூழ்ந்துள்ளதும் இளைஞர்கள் சரணம் அடையக் கூடியதுமான பாதத்தில் சிலம்பு ஓலம் இட நடந்து-சிலம்பு ஒலிக்க நடந்து, ஆன நடை-கூடிய நடையானது, சாதி சந்தான் எகின-உயர்ந்த வமிசத்து அன்னம் எனவும், மார்பர்-மார்பையுடையவராய், அம்தோகை என தான்-அழகிய மயில் என்னவும், எழும் கோலவிலைமாதர்- எழுந்து தோன்றும் அழகிய விலை மகளிரின், இன்பு ஆர் கலவி-இன்பம் நிறைந்த சேர்க்கையில், தாவு கொண்டே-பாய்தலைக் கொண்டு, கரிய நோய்கள் கொண்டே-துன்பத்தைத் தரும் நோய்களையடைந்து, பிறவிதான் அடைந்து ஆழும்-பல பிறவிகளையடைந்து துன்பத்தில் அழுந்துகின்ற, அடியேன் இடம்- அடியேனிடத்தில், சாலும் வினை அஞ்சி ஓட-நிறைந்த வினைகள் அஞ்சி விலக, தார் கடம்பு ஆடு-கடப்ப மலர் மாலை அசைகின்றதும், கழல்-