வீரக் கழலையணிந்ததுமான, பாத செந்தாமரைகள்-பாதமாகிய செந்தாமரையை, தாழ் பெரும் பாதை வழியே படிந்து-வணங்குகின்ற பெரிய வழியில் பொருந்தி, வருகு தாபம் விண்டே-அடுத்துவரும் தாகங்களை ஒழித்து, அமுத வாரி உண்டே-அமுதவெள்ளத்தைப்பருகி, பசிகள் தாபமும் தீர-பசியுந் தாகமுந் தீர, துகிர்போல் நிறம்-பவளம் போல நிறமும், காழ்கொள் உரு சராவும்-ஒளி கொண்ட உருவம் பொருந்த சோதிமுருகா எனும் காதல் கொடு-“ஜோதி முருகா” என்று கூறும் விருப்பத்தைக் கொண்டு, தான் இருந்து ஓத-மன அமைதியுடன்இருந்து ஓத, இரு ஓர் அகம் பேறு உறு-பெருமை பொருந்திய ஒப்பற்ற உள்ளம் பேறுபெறும்படியான, விஞ்சை தாராய்-ஞானத்தைத் தந்தருளுவீராக. பொழிப்புரை திரிசூலத்தை ஏந்தியவரும், எமது அன்னையும், பொன்னிறமுடையவரும், ஆசையைப் போக்குபவளும், குழையுந் தோடும் பூண்டு ஆடுகின்ற சிவபெருமானை விரும்பும் அழகியும், நல்ல விபூதியை அணிந்து காப்பாற்றுபவளும், திகம்பரியும், அழகிய காளியும், கலைமகளும், திருமகளும் நின்று துதிக்கின்ற தூய அன்னையும், மூங்கில் போன்ற திரண்ட தோளையுடையவளும் ஆகிய உமாதேவியைப் பாகத்தில் கொண்ட கருணை நிறைந்த பரமசிவத்தின் புதல்வர் என்று பெரிய உலகத்தவர் புகழும் விசித்திரமுடையவரே! சூரனைச் சங்கரித்தவரே! தேவலோகத்துக்கு உரியவரே! ஆறு கார்த்திகை மாதர்களின் மைந்தரே! குமாரக் கடவுளே! உபகாரியே! கடப்ப மலர் மாலையணிந்த புயத்தை யுடையவரே! வீரரே! சிவகுருவே! அழகரே! தேவ குமாரியாகிய தெய்வயானையின் கணவரே! என்று வேதங்களையும் ஆகமங்களையும் ஆய்ந்த தேவர்கள் முறையீட்டின் ஒலியானது உமது ஆற்றலைப்பாட, ஏழுமலைகளும், துண்டாகப் பொடிபட, அம்மலைகளிலிருந்து எழுந்திருந்த அசுரர்களின் உதிரம் பெருகி ஆறாகிவர, வேலைவிடுத்து நடனம் கொண்ட வேலவரே! மாலியவான் இறக்கவும் ஒப்பற்ற இரணியன் அழியவும், வலிமை மிகுந்த வாலியும், பருத்த மராமரமும், கும்பகர்ணனும,் கடலும் பயங்கரமான வலிமை கொண்ட இராவணனும் அழியவும், செலுத்திய அம்பையுடையவரும், அழகிய மேகவண்ணரும், மகிழ்ச்சியுடைய கோபிகைகளுடன் கூடி விளையாடிக் கலந்தவரும், இலக்குமியைத் தரித்த திருமார்பினரும், பொன்மகுடம் பூண்டவருமாகிய திருமாலின் புதல்வியின் அறிவு நிறைந்த |