பக்கம் எண் :


142 திருப்புகழ் விரிவுரை

 

தெய்வயானையம்மையின் மார்பும் மலை போன்ற தனமும் பொருந்தவும், இடையில் நுட்பம் நெகிழ்ந்து அசையவும், திருமுகத்தில் மகிழ்ச்சியுற்று, கருணாரசத்துடன் வாயிலிருந்து வரும் இனிமையை நுகர்ந்தும், இரத்தினச் சிலம்பு ஒலிக்கவும், அவரை மணக்குங் காதலைப் பாராட்டியும் மகிழ்ந்த மயில் வாகனரே! தூயவரே! வள்ளிநாயகிக்கு நாயகரே! வேதமுழக்கம் விளங்கும் திருச்செங்கோட்டு நகரில் வாழ வந்தவரே! கருநிறம் படைத்த திருமாலும் பிரமனும் தேவர்களும் புகழும் தனிப் பெருந்தலைவரே! கரிய மேகம் போன்ற கூந்தலில் உள்ள மாலையில் வண்டுகள் மொய்க்கின்ற நிலையும், பந்துபோல் புரள்கின்ற அழகிய புருவமும், பொன்தோடு அசையும் ஒளிமிக்க தாமரை போன்ற முகமும் உடையவர்கள்; கிளியைப் போல் கொஞ்சும் மொழியை உடையவர்கள், பாக்கு போன்ற கழுத்தினர், தேமலும் வாசனையும் பொருந்திய மூங்கில் போன்ற தோள்களையுடையவர்கள்; இரு மலைகள் போலவும், நீண்ட யானைக்கொம்பு, இளநீர் போலவும், தேன்போல் இனித்தும், முத்துமாலை தரித்தும், விளங்குவதுமாகிய தனத்தினர்; நீண்ட அலங்காரமான கண்டசரம் தரித்தவர்கள்; நறுமணம் பொருந்திய கலவைச் சந்தனக்கிண்ணம் போன்ற வயிற்றினர்; நீலோற்பலக் கணையை ஏவிய நல்ல மன்மதனுடைய இறுமாப்பு நிறைந்ததும் அன்புக்கு இடமானதும்சந்ததியைத் தருகின்றதுமான அல்குல் என்ற காமநிதியாம் அமுதத்தைத்தரும் சம்போகத்தினர்; திக்குகளில் மின்னும் மின்னலைப் போன்ற-நூல் போன்ற நுண்ணிய இடையினர்; அழகுநிறைந்த பொற்சரிகையிட்ட முன்தானை அமைந்த பட்டுபுடவை சூழ்ந்துள்ளதும் இளைஞர்கள் சரணம் புகுவதுமான காலில் சிலம்பு ஒலிக்க நடந்து, உயர்ந்த குலத்து அன்னம் போன்ற நடையினர்; அழகிய மார்பினர்; அழகிய மயில் போன்றவர்கள்; ஆகிய விலைமாதர்களின் இன்பம் நிறைந்த சேர்க்கையில் தாவி பாபாய்வதைக் கொண்டு, துன்பத்தைத் தருவதான நோய்களை யடைந்து, பல பிறவிகளையடைந்து, வேதனையில் அழுந்தும் அடியேனிடத்தில் நிரம்பி வரும் வினைகள் அஞ்சியகல, கடப்பமலர் மாலை அசைகின்றதும், வீரக்கழலை யணிந்ததும், செந்தாமரை போன்றதுமாகிய திருவடியை விரும்பும் அப்பெருநெறியில் பொருந்தி, ஆசைகளை ஒழித்து, அருள் அமுத வெள்ளத்தைப் பருகி, பசியுந் தாகமும் நீங்க, பவள நிறமும் ஒளியுங் கொண்ட உருவமும் பொருந்த, “ஜோதி