பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 143

 

முருகா” என்று கூறும் விருப்பங் கொண்டு, மன அமைதியுடன் இருந்து ஓத பெருமை வாய்ந்த ஒப்பற்ற உள்ளம் பேறு பெறும்படியான ஞானத்தைத் தந்தருளுவீராக.

விரிவுரை

இத்திருப்புகழில் முதல் மூன்று அடிகள் பெண்களின் கேசாதிபாத வருணனையைக் கூறுகின்றார்.

சுணங்காவி கிளை:-

சுணங்கு-தேமல்.ஆவி-வாசனை. கிளை-மூங்கில், பெண்களின் தோள் மூங்கில் போலவும், தேமலும் வாசனையும், நிறைந்து அழகு செய்யும்.

சாறு பொழியாவளம்:-

சாறு பொழி அ வளம். வள்ளம்-என்ற சொல் வளம் என வந்தது. வள்ளம்- கிண்ணம். இது வயிற்றுக்கு உவமையாயிற்று.

நீலவண்டேவி:-

நீலம்-நீலோற்பல மலர். வண்டு - கணை.

அங்காரநிறை:-

அகங்காரம்-இறுகாப்பு. இறுமாப்பு நிறைந்த, அகங்காரம் என்ற சொல் அங்காரம் என வந்தது.

அஞ்சாறு பொன்தோகையமை பாளிதம்:-

அம்-அழகு. சாலும்-மிகுந்த. அழகு மிகுந்த பொன் சரிகைக் கரையமைந்த முன்தானையுடன் கூடிய புடவை சூழ்கின்ற பாதம்.

பாத செந்தாமரைகள் தாழ் பெரும்பாதை வழியே படிந்து:-

முருகப் பெருமானுடைய திருவடியை வணங்குவதே உய்யும் பெரு நெறியாகும். “பெறநெறி பிடித்தொழுக வேண்டும்” என்பர். இராமலிங்கர்.

அமுத வாரியுண்டே பசிகள் தாபமுந் தீர:-

இறைவனுடைய திருவருளாகிய ஆரமுதம் உண்டவர்க்குப் பசி தாகங்கள் பொருந்த மாட்டா.

“குகனெ குருபர னே என நெஞ்சிற்
புகழ்அருள் கொடு நாவினில் இன்பக்
குமுளி சிவவமு தூறுக உந்திப்           பசியாறி”        - திருப்புகழ்.