பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 145

 

செழுமறை தேர்தென்றலையம் புசகபூதா.         - கந்தரந்தாதி (82)

கருத்துரை

திருச்செங்கோட்டு முருகா! ஞானத்தைத் தந்தருள்வீர்

149

பொன்ற லைப்பொய்க் கும்பி றப்பைத்
தும்ப றுத்திட் டின்று நிற்கப்
புந்தி யிற்சற் றுங்கு றிக்கைக்        கறியாமே
பொங்கி முக்கிச் சங்கை பற்றிச்
சிங்கி யொத்தக் கஞ்ச சங்கடத்துப்
புண்ப டைத்துக் கஞ்ச மைக்கட்       கொடியார்மேல்
துன்று மிச்சைப்பண்டனுக்குப்
பண்ப ளித்துச் சம்ப்ர சச்செய்ப்
தும்பி பட்சிக் கும்ப்ர சச்செய்ப்      பதிமீதே
தொண்டு பட்டுத் தொண்ட னிட்டுக்
கண்டு பற்றத் தண்டை வர்க்கத்
துங்க ரத்தப் பங்க யத்தைத்       தருவாயே
குன்றெ டுத்துப்பந்த டித்துக்
கண்சி வத்துச் சங்க ரித்துக்
கொண்ட லொத்திட் டிந்த்ரனுக்கிச்      சுரலோகா
கொம்பு குத்திச் சம்ப ழுத்தித்
திண்ட லத்திற் றண்டு வெற்பைக்
கொண்ட முக்கிச் சண்டையிட்டுப்      பொரும்வேழம்
சென்று ரித்துச்சுந்த ரிக்கச்
சந்த விர்த்துக் கண்சு கித்துச்
சிந்தை யுட்பற் றின்றி நித்தக்     களிகூருஞ்
செண்ப கத்துச்சம்பு வுக்குத்
தொம்ப தத்துப்பண்பு ரைத்துச்
செங்கு வட்டிற் றங்கு சொக்கப்    பெருமாளே.

பதவுரை

குன்று எடுத்து-கிரவுஞ்சமலையை எடுத்து, பந்து அடித்து-பந்தடிப்பது போல் வேலால் எடுத்து எறிந்து, கண்சிவந்து-கண்கள் சிவந்து, சங்கரித்து-அதனை அழித்து, கொண்டல் ஒத்திட்டு-மேகத்தை யொத்துக்