கைமாறு கருதாமல், இந்திரனுக்கு இ சுரலோகா-தேவலோகத்தை இந்திரனுக்கு ஈந்தவரே! கொம்பு குத்தி-கொம்பால் குத்தியும், சம்பு அழுத்தி-சம்பங்கோரை போன்ற நுனியால் அழுத்தியும், திண்தலத்தில்-திண்ணிய இப்பூமியில், தண்டு வெற்பை கொண்டு அமுக்கி-கதையையும் மலையையும் கூட அடக்கி, சண்டை இட்டு-போர் செய்து, பொரும் வேழம்-எதிர்த்த யானையை, சென்று உரித்து- சென்று அதை உரித்து, சுந்தரிக்கு அச்சம் தவிர்த்து கண்சுகித்து-பார்வதிக்கு இருந்த பயத்தைப் போக்கிக் கண்களிப்புடன், சிந்தையில் பற்று இன்றி- திருவுள்ளத்தில் எதனிடத்தும் பற்று இன்றி, நித்தம் களிகூரும்-நாள்தோறும் மகிழும், செண்பகத்து-செண்பக மலரணியும், சம்புவுக்கு சிவபெருமானுக்கு, தொம் பதத்து-துவம் என்ற சொல்லுக்கு, பண்பு உரைத்து-விளக்க இயல்பை உபதேசித்து, செங்குவட்டில் தங்கு-திருச்செங்கோட்டில் வீற்றிருக்கும், சொக்க- அழகிய, பெருமாளே-பெருமையிற் சிறந்தவரே! பொன்றலை-இறத்தலை யுடையதாய், பொய்க்கும்-நிலையில்லாததாயுள்ள, பிறப்பை-பிறப்பு என்பதை, தும்பு அறுத்திட்டு-அதன் தும்பினை அறுத்து, இன்று நிற்க-இன்று ஒரு நிலையில் நிற்கும்படி, புந்தியில் சற்றும் குறிக்கைக்கு அறியாமே-புத்தியில் சற்றேனும் குறித்து மேற்கொள்ள அறியாமல், பொங்கி முக்கி-சினந்தும் முயற்சிசெய்தும், சங்கை பற்றி-சந்தேகங்கொண்டு, சிங்கி ஒத்த சங்கடத்து புண்படைத்து-விஷம் போன்ற துன்பங்களால் மனம் புண்ணாகி, கஞ்ச மை கண்-தாமரை யொத்த மை பூசிய கண்களையுடைய, கொடியார்மேல்-மாதர்கள் மீது, துன்றும் இச்சை பண்டனுக்கு-ஆசை பொருந்திய பொருளனாகிய எனக்கு, பண்பு அளித்து-நற்குணத்தை அளித்து, சம்ப்ரமித்து-சிறப்புறச்செய்து, தும்பி பட்சிக்கும் ப்ரச-வண்டு உண்ணும் தேனையுடைய, செய் பதிமீது-வயலூர் தலத்தில், தொண்டுபட்டு-தொண்டு செய்யும் தன்மையைக் கொண்டு, தெண்டன் இட்டு-அட்டாங்கமாக வீழ்ந்து கும்பிட்டு, கண்டு பற்ற-அடியேன் தெரிசித்து பற்றுமாறு, தண்டைவர்க்க-தண்டை முதலிய அணிகலன் அணிந்துள்ள, துங்க அரத்த பங்கயத்தை-தூய்மையும் செம்மையும் உடைய பாததாமரையை, தருவாயே-தந்தருள்வீராக. பொழிப்புரை கிரவுஞ்ச மலையை வேலாயுதத்தால் பந்துபோல் எறிந்து கண் சிவந்து, அதனை அழித்து, மேகம் போல் கைமாறு கருதாது இந்திரனுக்குத் தேவலோகத்தை ஈந்தவரே! கொம்பினால் குத்தியும் சம்பங்கோரை போன்ற நுனியால் அழுத்தியும், திண்ணிய பூமியில் கதாயுதத்தையும் மலையையுங் கூட அடக்கக் கூடிய வலிமையுடன் போர் புரிந்து யானையை, அதன் முன் சென்று அதன் தோலை உரித்து, பார்வதிக்கு இருந்த அச்சத்தை யகற்றிக் கண் களிப்புடன், |