சென்றுரித்து:- சிவபெருமான் கஜசம்மாரம் புரிந்த பெருமையை இது குறிக்கின்றது. தொம்பதம்:- தத்வமஸி. இது சாமவேத மகா வாக்கியம். தத்-அது,த்வம்-நீ. அஸி-ஆகின்றாய். அது நீ ஆகின்றாய். மஹா வாக்கியங்கள் நான்கு. அவற்றின் விவரம். தத்வமஸி சாமவேத சாந்தோக்ய உபநிடதம். இதன் பொருள்; அது நீ ஆகின்றாய். ப்ரக்ஞானம் பிரமம்:- ருக்வேதம்-ஐதரேயாரண்யகம். இதன் பொருள்; பெரிய ஞானமே சொரூபமாகவுள்ளது பிரமம். அயமாத்மா பிரம்மம்:- அதர் வணம் மாண்டூக்யம். அயம்ஆத்மா-இந்த ஆத்மா. ப்ரஹ்ம - பெரியது. அஹம்பரஹ்மாஸ்மி:- யஜுர் வேதம். ப்ருஹதாரண்யம். அஹம்-நான், பிரஹ்ம அஸ்மி-பிரம்மமாக இருக்கின்றேன். இவற்றின் சுருக்கம் ஸோஹம். இந்த நான்கு மகா வாக்கியங்களை சிரவணம் (1) மனனம் (2) நிதித்யாசனம் (தெளிதல்) (3) நிட்டை கூடுதல் (சமாதி) (4) என்றுரி பு கீதை கூறுகின்றது. கருத்துரை திருச்செங்கோட்டுத் தெய்வமே! உமது பாத பங்கயந் தந்தருள்வீர். மந்தக் கடைக்கண் காட்டுவர் கந்தக் குழற்பின் காட்டுவர் மஞ்சட் பிணிப்பொன் காட்டுவ ரநுராக வஞ்சத் திரக்கங் காட்டுவர் நெஞ்சிற் பொருத்தங் காட்டுவர் வண்பற் றிருப்புங் காட்டுவர் தனபாரச் |