சந்தப்பொருப்புங் காட்டுவர் உந்திச் சுழிப்புங் காட்டுவர் சங்கக் கழுத்துங் காட்டுவர் விரகாலே சண்டைப் பிணக்குங் காட்டுவர் பண்டிட் டொடுக்கங் காட்டுவர் தங்கட் கிரக்கங் காட்டுவ தொழினேனோ பந்தித்தெருக்கந் தோட்டினை யிந்துச் சடைக்கண் சூட்டுமை பங்கிற் றகப்பன் தாட்டொழு குருநாதா பைம்பொற்பதக்கம் பூட்டிய அன்பற் கெதிர்க்குங் கூட்டலர் பங்கப் படச்சென் றோட்டிய வயலூரா கொந்திற்புனத்தின் பாட்டிய லந்தக் குறப்பெண் டாட்டொடு கும்பிட் டிடக்கொண் டாட்டமொ டணைவோனே குன்றிற்கடப்பந் தோட்டலர் மன்றற் ப்ரசித்தங் கோட்டிய கொங்கிற் றிருச்செங் கோட்டுறை பெருமாளே. பதவுரை பந்தித்த-கட்டப்பட்ட, எருக்கம் தோட்டினை-எருக்கம் பூ மாலையை, இந்து சடை கண்சூடு-சந்திரனுடன் கூடிய சடையில் சூடுபவரும், உமை பங்கில்- உமாதேவியை ஒரு பாகத்தில் உடையவருமாகிய, தகப்பன் தாள் தொழு- தந்தையாருடைய திருவடியைத் தொழுகின்ற, குருநாதா-குருநாதரே! பை பொன் பதக்கம் பூட்டிய-பசுமையாகிய பொன்னாலாகிய பதக்கத்தை அணிவித்த, அன்பர்க்கு எதிர்க்கும் கூட்டலர் பங்கப்பட-பக்தனை எதிர்த்து வந்த பகைவர்கள் தோல்வியடையும்படி, சென்று ஒட்டி-அங்கு சென்று அவர்களைப் புறங்காட்டி ஓடச்செய்த, வயலூரா-வயலூர் வள்ளரே! கொந்தில் புனத்தின் பாட்டு இயல்-பூங்கோத்துக்கள் உள்ள தினைப் புனத்தில் பாடிக்கொண்டு இருந்த, அந்தகுற பெண்டு ஆட்டொடு-அந்தக் குறமகளுடன் விளையாடி, கும்பிட்டிட கொண்டாட்டமொடு-கும்பிடுவதற்கு மிகுந்த மகிழ்ச்சி கொண்டு, அணைவோனே-தழுவியவரே! குன்றில் கடப்பம் தொட்டு அலர்-மலையில் கடப்ப மலர் மலரும், மன்றல்ப்ரசித்தம் கோட்டிய-வாசனையால் வரும் புகழைக் கொண்ட, கொங்கில் திருச்செங்கோடு உறை-கொங்கு நாட்டில் |