மேவி யேமிதி லைசிலை செற்றுமின் மாது தோள்தழுவிப்பதி புக்கிட வேறு தாயடவிக்குள் விடுத்தபி னவனோடே ஞால மாதொடு புக்கவ னத்தினில் வாழும் வாலிப டக்கணை தொட்டவ னாடி ராவண னைச்செகு வித்தவன் மருகோனே ஞானதேசிக சற்குரு உத்தம வேல வாநெரு வைப்பதி வித்தக நாக மாமலை சொற்பெற நிற்பதொர் பெருமாளே. பதவுரை மேலை வானோர் உரை-மேலுலகத்தில் உள்ள தேவர்கள் புகழும் தசரற்கு- தசரதனுக்கு, ஒரு பாலனாய் உதித்து-ஒப்பற்ற மகனாய்ப் பிறந்து, ஓர் முநிக்கு- சமானமில்லாத விசுவாமித்திர முனிவர் செய்த, ஒரு வேள்வி காவல் நடத்தி- சிறந்த யாகத்தைக் காவல் செய்து, அதற்கு உரு அடியாலே மேவியே-அந்தக் கல்லுக்குப் பாதத்தாலே முன் வடிவைக் கொடுத்து, மிதிலை சிலை செற்று- மிதிலாபுரியில் இருந்த வில்லை ஒடித்து, மின்மாது தோள்தழுவி-ஒளிமிகுந்த சீதையின் தோளைத் தழுவி மணஞ்செய்து, பதி புக்கிட-அயோத்திமா நகரம் வந்து சேர, வேறுதாய் அடவிக்குள் விடுத்த-மாற்றாந் தாயான கைகேயி காட்டுக்குப் போகும்படிச் செய்ய, பின்னவனோடே-இலட்சுமணனுடனும், ஞாலமாதொடு புக்கு-பூதேவியாஞ் சீதையுடனும் சென்று, அ வனத்தினில் வாழும் வாலி படகணை தொட்டவன்-அவ்வனத்தில் வாழ்ந்த வாலி இறக்கும்படி அம்பை ஏவினரும், நாடி ராவணனை செகுவித்தவன்-தேடிச் சென்று இராவணனை அழிவித்தவருமான இரகுராமருடைய, மருகோனே- திருமருகரே! ஞானதேசிகரே-ஞான ஆசாரியரே! சற்குருவே-உண்மைக் குருவே! உத்தம் வேலவர்-உத்தமமான வேலவரே! நெருவை பதி வித்தக-நெருவூரில் வாழும் ஞானமூர்த்தியே! நாகமாமலை-திருச்செங்கோட்டில், சொல்பெற நிற்பது ஓர்-புகழ்பெற வீற்றிருக்கும் ஒப்பற்ற, பெருமாளே-பெருமையில் மிகுந்தவரே! ஆலகால பட பை மடப்பியர்-ஆலகால நஞ்சையுடைய பாம்பின் படம் போன்ற அல்குலையுடைய மடமாதர்கள், ஈரவாள் அற எற்றும் விழிச்சியர்-நெய்தடவிய ஈரமுடைய வாள்போல் மிகவும் தாக்கவல்ல கண்களையுடையவர்கள், யாவராயினும் நத்தி அழைப்பவர்-யாவராயிருந்தாலும் அவர்களை விரும்பி அழைப்பவர்கள், தெரு ஊடே ஆடி ஆடி நடப்பது ஒரு பிச்சியர்- நடுத்தெருவில் ஆடிஆடி நடக்கின்ற பித்து பிடித்தவர்கள், பேசி ஆசை கொடுத்து மருட்டிகள்-பேசும் வண்மையால் ஆசையூட்டி மயக்குபவர்கள், ஆசை வீசி அணைக்கு |