பக்கம் எண் :


16 திருப்புகழ் விரிவுரை

 

விழைந்தான்புரி தவப்பேற்றினை விளைந்தான் களி திளைத்தான்
                                         - திருவிளையாடற்புராணம்

இனி, முருகவேள் உருத்திரஜன்மராக வந்தார் என்பது பற்றிச் சிறிது கூறுதும். ஓலமறைகளறைகின்ற ஒருவனும், மூவருங்காணாத முழு முதல்வனும் ஆகிய முருகவேள் உருத்திர ஜன்மராக வந்தார் என்பது அவருடைய முழு முதற்றன்மைக்கு இழுக்கன்றோவெனின், இழுக்காகாது. முருக சாரூபம் பெற்ற அபரசுப்ரமண்யருள் ஒருவரே முருகவேள் அருள் தாங்கி உருத்திர ஜன்மராக அவதரித்தனர். உக்கிரப் பெருவழுதியாகவும், ஞானசம்பந்தராகவும் வந்ததையும் அங்ஙனமே ஸ்ரீகண்டருத்திரர், வீரபத்திரர், வைரவர், ஆகியோர் செயல்களைப் பரவசித்தின் செயலாக ஏற்றித் தேவார திருவாசகங்கள் கூறுவதனால் பரசிவத்திற்கு இழுக்கில்லையாமாறு போல், அபரசுப்ரமண்யர்கள் சம்பந்தராகவும் உருத்திரசன்மராகவும், உக்கிரப்பெருவழுதியாகவும் வந்து ஆற்றிய அருஞ் செயல்களை பரசுப்ரமண்யத்தின் செயலாகத் திருப்புகழ் கூறுகின்றது. இதனைக் கூர்த்த மதி கொண்டு நுனித்து உணர்ந்து ஐயந்தெளிந்து அமைதியுறுக.

“திருத்தகு மதுரைதனிற்சிவன்பொரு ணிறுக்கு மாற்றால்
   உருத்திர சருமனாகி யுறுபொருள்    விரித்தோன்‘ - கந்தபுராணம்

“செஞ்சொற்புலவர்கள் சங்கத் தமிழ்தெரி
           செந்திற் பதிநக ருறைவோனே”  -(வஞ்சத்துட) திருப்புகழ்

“உரைக்கச் செட்டிய னாய்ப்பன் முத்தமிழ்
           மதித்திட் டுச்செறி நாற்கவிப்புணர்
           ஒடுக்கத் துச்செறிவாய்த்தலத்துறை பெருமாளே”
                                         - (வழக்குச்) திருப்புகழ்

“அரியதாதை தானேவ மதுரேசன்
   அரிய சாரதாபீட மதனிலேறி யீடேற
   அகிலநாலு மாராயு மிளையோனே”   - (மனகபாட) திருப்புகழ்

“சடிலத் தவனிட்டவிசிட் டகுலத்
   தொருசெட் டியிடத்தினுதித் தருள்வித்
   திருத் ரஜன்மப்பெயர் செப்பியிடப் பரிவாலே
   சநகர்க்கு மகஸ்த யபுலஸ்த் யசநற்
   குமரர்க்கு குமநுக்ரக மெய்ப் பலகைச்
   சதுபத்து நவப்புலவர்க்கும் விபத் தியில்ஞான
   படலத்துறுலக்கணலக் யதமிழ்த்