முலைச்சியர்-ஆசை வலையை வீசி தழுவுகின்ற கொங்கையினர், பலர் ஊடே- பலருடைய மத்தியில், மாலை ஓதி விரித்து முடிப்பவர்-மாலை தரித்த கூந்தலை முடிப்பவர்கள், சேலை தாழ நெகிழ்ந்த அரை சுற்றிகள்-புடவை கீழே தாழும்படி தளர்த்தி இடையில் சுற்றுபவர்கள், வாசம் வீசுமணத்தில் மினுக்கிகள்-வாசனை வீசும் நறுமணங் கொண்டு மினுக்குபவர்கள், உறவாலே- தமது சம்பந்தத்தினால், மாயை ஊடுவிழுத்தி அழுத்திகள்-மாயையின் உள்ளே விழும்படி அழுத்துபவர்களாகிய பொது மாதர்களின், காமபோக வினைக்குள் ஆசை யநுபவச் செயல்களில் ஈடுபட்டதாலே, உனை பணி வாழ்வு இலாமல்- உம்மைப் பணிகின்ற நல்வாழ்வு இல்லாமல், மல சனனத்தினில் உழல்வேனோ- ஆணவ மலத்துடன் கூடிய பிற்ப்பினில் அலைவேனோ? பொழிப்புரை மேலுகத்தில் வாழ்கின்ற தேவர்கள் புகழ்கின்ற தயாத மன்னவனுக்கு ஒப்பற் குமாரனாகப் பிறந்து, சமான மில்லாத விசுவாமித்திர முனிவர் செய்த யாகத்தைக் காத்து, அந்தக் கல்லுக்கு முன் உருவத்தைத் திருவடியால் கொடுத்து, மிதிலாபுரியில் இருந்த வில்லையொடித்து, ஒளிமிக்க சீதாதேவியைத் திருமணஞ்செய்து, மறுபடியும் அயோத்திமாநகருக்குச் சென்று, மாற்றாந்தாயான கைகேயி காட்டுக்குப் போகும்படிச் செய்ய, இலட்சுமணனுடனும், பூதேவியாம் சீதையுடனும் சென்று, அந்தக் காட்டில் வாழ்ந்த வாலி இறக்கும்படி அம்பையேவினவரும், தேடிச்சென்று இராவணனை அழித்தவருமான இரகுராமருடைய திருமருகரே! ஞானாசிரியரே! சற்குருவே! உத்தம் வேலாயுதரே! நெரூரில் வாழும் ஞான மூர்த்தியே! திருச்செங்கோட்டில் புகழ்பெற வீற்றிருக்கும் பெருமிதமுடையவரே! ஆலகால நஞ்சையுடைய பாம்பின் படம் போன்ற அல்குலையுடைய மடமாதர்கள், நெய்யின் ஈரமுள்ள வாள் போலமிகவுந் தாக்க வல்ல கண்கையுடையவர்கள், யாவராயிருந்தாலும், விரும்யழைப்பவர்கள், நடுத்தெருவில் ஆடியாடி நடக்கின்ற பித்துப்பிடித்தவர்கள், தங்கள் பேச்சு வன்மையால் ஆசையூட்டி மயக்குபவர்கள், ஆசை வலையை வீசி அணைக்கின்ற கொங்கையர்கள், பலர் மத்தியிலும் மாலையணிந்த கூந்தலை யவிழ்த்து முடிப்பவர்கள், புடவை கீழே தாழும்படி தளர்த்தி இடையில் சுற்றுபவர்கள், நறுமணத்துடன் மினுக்குபவர்கள், உறவினால் மாயைக்குள் அழுத்துபவர்களுமான பொது மாதர்களின் காமபோகச் செயல்களில் ஈடுபட்டதாலே! உம்மைப் |