பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 161

 

பணியும் நல்வாழ்வு இல்லாமல் மும்மலங்களுக்கு உறவைிடமான பிறப்பினில் அலைவேனோ?

விரிவுரை

இத்திருப்புகழில் முதல் நான்கு அடிகள் பொதுமாதரது செயல்களைக் கூறுகின்றன.

மேலை வானொருரைத் தசரற்கு:-

தசரதன் என்ற சொல் தசரன் என வந்தது. இந்திரனுடைய நகரைக் கவர்ந்த சம்பராசுரனைத் தயரதன் கொன்று பொன்னுலகை மீட்டு இந்திரனுக்கு அளித்தான். அதனால் தசரதனை தேவலோக வாசிகள் புகழ்கின்றார்கள்.

“குன்றளிக்கு குலமணித்தோள் சம்பரனைக்
குலத்தோடு சென்று நீ கொண்டு
அன்றளித்த அசரன்றோ புரந்தான்
இன்று ஆள்கின்றது அரச என்றான்”    -கம்பராமாயணம்.

முனிக்கொரு வேள்விக் காவல் நடத்தி:-

இராமசந்திரமூர்த்தி விசுவாமித்திர முனிவர் உலக நலங்கருதிச் செய்த வேள்வியைக் காவல் புரிந்து உதவி செய்தார்.

எண்ணுதற் காக்கரி திரண்டு மூன்று நாள்
விண்ணவர்க் காக்கிய முனிவன் வேள்வியை
மண்ணினைக் காக்கின்ற மன்னன் மைந்தர்கள்
கண்ணினைக் காக்கின்ற இமையில் காத்தனர்       - கம்பராமாயணம்.

அகற்குரு அடியாலே மேவியே:-

அகற்கு உரு.

இந்திரர்கௌதமர் வடிவில் வந்து அகலிகையைத் தழுவினான். அதனால் கல்லாகுமாறு கௌதம் சபித்தார்.

இராமருடைய திருவடியின் துகள் பட்டவுடன் கௌதமருக்கு மனைவியாக ஆவதற்கு முன் இருந் கன்னி அகலிகையாக அத்திருவடித்துகள் அருளியது.

கோதமன்தன்பன்னிக்கு முன்னையுரு கொத்ததிவன்
போதுநின்ற தெனப்போலிந்த பொலன் கழற்காற் கொடிகண்டாய்
காதலென்றன்உயிர்மேலும் மிக்கரியோன் பாலுண்டால்
ஈதிவன்றன் வரலாறும் புயவலியும் எனவுரைத்தான்
                                                         - கம்பராமாயணம்.

அகலிகையின்நிலை மூன்று.

கௌதமர் மணப்பதற்குமுன் கன்னியகலிகை; மனந்தபின்