பக்கம் எண் :


162 திருப்புகழ் விரிவுரை

 

பன்னி யகலிகை. இந்திரன் தீண்டிய பின் தூய்மையிழந்த அகலிகை.

இராமருடைய திருவடியில் துகள், கல்லான அகலிகையை, அமுதத்துடன் பாலாழியில் பிறந்தபோது இருந்த கன்னி அகலிகையாகச் செய்துவிட்டது. அவளுடைய வடிவத்தையே பின்னுக்குத் தள்ளி பெரிய புரட்சியைச் செய்துவிட்டது.

இந்தக் குறிப்பு கோதமன்றன் பன்னிக்கு முன்னையுரு...... பன்னியாக ஆவதற்கு முன்னிருந்த வடிவு என்று கூறும் கம்பர் கவிநயத்தால் உணர்க.

மிதிலைச்சிலை செற்று:-

நெடுங்காலம் யாவராலும் வளைக்க முடியாத உருத்திர வில்லை இராமர் ஒரு நொடியில் ஒடித்துவிட்டார்.

தடுத்திமை யாம லிருந்தவர் தாளின்
மடுத்தது நாணாதி வைத்தது நோக்கார்
கடுப்பினில் யாரும் அறிந்திலர் கையால்
எடுத்துகண்டனர் இன்றது கேட்டார்.

வேறுதாயடவிக்குள் விடுத்த:-

இராமர் மாற்றாந்தாயின் மொழியை மறை ‘மொழியாகக் கொண்டு, ஆழிசூழ் உலகம் அனைத்தும் தம்பிக்குத் தியாகஞ் செய்துவிட்டு, இளையோனும் வைதேகியும் உடன் வரக் கொடிய கானகஞ் சென்றார்‘

இது மற்றவர்கள் நினைக்க முடியாத அரிய தியாகம்.

நெருவைப்பதி வித்தக:-

நெருவூர்-இரு கருவூருக்கு வடக்கே ஆறு கல் தொலைவில் காவேரிக்குத் தென்கரையில் விளங்குகின்ற அருமையான திருத்தலம். இங்கு சதாவிப்பிரம்மேந்திரர் சமாதி விளங்குகின்றது.

நாகமாலை:-

திருச்செங்கோடு நாகவடிவாகத் திகழ்கின்றது. அதனால், சர்ப்பகிரி யெனப்படும்.

கருத்துரை

திருச்செங்கோட்டுத் தேசிகா+ மாதர் வயலுூம பிறவித் துயரும் அற அருள் செய்வீர்.

154

காலனிடத் தணுகாதே
காசினியிற் பிறவாதே