பக்கம் எண் :


164 திருப்புகழ் விரிவுரை

 

கருத்துரை

திருச்செங்கோட்டுத் தெய்வமணியே! இறவாமலும் பிறவாமலும் செய்யும் மெய்ஞ்ஞானத் திருவருளமுதைத் தந்தருள்வீர்.

155

தாமா தாமா லாபா லோகா
தாரா தாரத் தரணீசா
தானா சரோ பாவா பாவோ
நாசா பாசத் தபராத
யாமா யாமா தேசா ரூடா
யாரா யாபத் தெனதாவி
யாமா காவாய்தீயே னீர்வா
யாதே யீமத் துகலாமோ
காமா காமா தீனா நீணா
காவாய் காளக் கிரியாய்கங்
காளா லீலா பாலா நீபா
காமா மோதக் கனமானின்
தேமார் தேமா காமீ பாகீ
தேசா தேசத் தவரோதுஞ்
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் பெருமாளே.

பதவுரை

தாமா-மாலையுடையவரே! தாம ஆலாபா-சுக சம்பாஷணையுடையவரே! லோக ஆதாரா-உலகுக்கு ஆதாரமானவேர! தாரம் தரணி ஈசா-நீர் நிலம் என்றவைகட்டுத் தலைவரே! தான ஆசாரோ-தானமும் ஆசாரமும், உடையவர்களால், பாவா-தியானிக்கப்படுபவரே! பாவோ-நாசா-பாவத்தை நாசஞ் செய்பவரே! காமா-அன்பரே! காம ஆதீனா அன்பர்கள் விரும்புவதை வழங்கும் சுதந்திரம் உடையவரே! நீள் நாகாவாய்-நீண்ட பாம்புருவம் வாய்ந்துள்ள, காளக்கிரியாய்-நாக மலையில் இருப்பவரே! கங்காள லீலா பாலா- எலும்புக் கூட்டை விளையாட்டாகத் தரித்துள்ள சிவபெருமானுடைய குமாரரே! நீபா-கடப்ப மலர் மாலையணிந்தவரே! காம ஆமோத கனமானில்-அன்பும் மகிழ்ச்சியும் பெருமையும் உள்ள வள்ளி நாயகியின், தேம் ஆர்-தேன்