கலந்த, தேமா-இனிய தினைமாவின், காமீ-விருப்பமுள்ளவரே! பாகீ தகுதியுள்ளவரே! தேசா-ஒளியுள்ளவரே! தேசத்தவர் ஓதும்-உலகத்தவர்கள் புகழ்ந்து போற்றும், சேயே-செம்மையானவரே! வேளே-உபகாரியே! பூவே- அழகரே! கோவே-தலைவரே! தேவே-தேவரே! தேவ பெருமாளே-தேவர்கள் வணங்கும் பெருமை மிகுந்தவரே! பாசத்து அபராத-பாசங்களில் பற்று வைத்ததின் அபராதமாக, யாமா-தெற்கிலுள்ள, யாமாதேசார் ஊடு ஆய்- யமதேசத்தில் உள்ளவரிடையே, ஆராயா ஆபத்து எனது ஆவி ஆமா- ஆராய்ச்சியில்லாத ஆபத்து நிலையில் என்னுடைய உயிர் சேர்தல் ஆமா? காவாய்-காத்தருள்; தீயேன்-பொல்லேனாகிய அடியேன், நீர் வாயாதே- நற்குணம் வாய்க்கப் பெறாமல், ஈமத்து உகலாமோ-மயானத்தில் அழியலாமோ? பொழிப்புரை மாலையணிந்தவரே! இனிய உரையாடலையுடையவரே! உலகத்துக்கு ஆதாரமானவேர! நீர் நிலம் இவைகட்குத் தலைவரே! கொடைக்குணமும் ஆசாரமும் உள்ளவர்கள் தியானிக்கும் பொருளே! பாவத்தை யழிப்பவரே! அன்பரே! அன்பர்கள் விருப்பத்தையளிக்கும் சுதந்திர முடையவரே! பெரிய பாம்பு வடிவாயுள்ள நாகமலையில் இருப்பவரே! எலும்புக் கூட்டை விளையாட்டாக அணிந்த சிவபெருமானுடைய புதல்வரே! கடப்ப மாலை யணிந்தவரே! மிகுந்த விருப்பமுள்ள பெருமை பொருந்திய வள்ளிநாயகி கொடுத்த தேன் கலந்த இனிய தினைமாவில் விருப்பமுள்ளவரே! தகுதியுள்ளவரே! ஒளியுள்ளவரே! உலகத்தவர் புகழும் சேயே! உபகாரியே! அழகரே! தலைவரே! தேவரே! தேவர் போற்றும் பெருமிதமுடையவரே! பாசங்களில் பற்று வைத்ததின் அபராதமாகத் தென் திசையில் உள்ள யமபுரத்தில் ஆராய்ச்சி யில்லாமல் ஆபத்து நிலையில் என் உயிர்சேர்தல் ஆமோ? காத்தருளுவீர். தீயேன் நற்குணம் வாய்க்காமல் மயானத்தில் சென்று அழியலாமோ? விரிவுரை தாமா:- தாமம்-மாலை. தாமா லாபா:- தாம ஆலாபா. சுகமான உரையாடலையுடையவன். தாரத்தரணீசா:- தாரம்-தண்ணீர். தரணி-பூமி. இவைகட்குத் தலைவன். தானா சாரோ பாவா:- தான ஆசா ரோ பாவா தானஞ்செய்து ஆசாரமாகவுள்ள |