பக்கம் எண் :


166 திருப்புகழ் விரிவுரை

 

அடியார்கள் தியானிக்கும் பொருள் முருகன்.

யாவோ நாகா:-

பாவங்களை நாசஞ் செய்பவன்.

பாசத்தபராத:-

ஆசாபாசமுள்ளவர்களைத் தண்டிக்கும் இடம் நரகலோகம்.

யாபா யாமாதே சாரூடா:-

யாமம்-தென்திசை.

தென்திசையில் உள்ள யமபுரியோர்.

எனதாவி யாமா:-

என் ஆவி யமனுடைய நகரஞ் சேர்வது ஆமா? அது நல்லதன்று. காவாய்- காத்தருள்.

தீயேனீர்வாயாதே:-

தீயேன் நீர் வாயாதே. நீர்-நீர்மைக் குணம். நற்குணம்.

“பெருக்கு நீ ரவளொடும் பெருந்தகை யிருந்ததே”       - தேவாரம்.

ஈமத்துகலாமோ:-

சுடலையில் சென்று அழியலாமோ?

காமா:-

காமம்-அன்பு. அன்பனே!

காமாதீனா:-

காம ஆதீனா. அன்பர்கள் விரும்பியவற்றை விரும்பியவாறு வழங்குவதில் சுதந்தரமுடையவர் முருகவேள்.

நீணாகாவாய் காளக்கிரியாய்:-

நீள் நாவாய் காளக்கிரி-நீண்ட பாம்புருவம் வாய்ந்த சர்ப்பகிரி.

கங்காளா லீலா பாலா:-

கங்காளம்-எலும்புக்கூடு.

சர்வசங்கார காலத்து மாலயனாதி வானவரை எரித்து அவரது கங்காளத்தை சிவமூர்த்தியணிந்து கொள்வார், அதனால் அவர் கங்காளர் எனப்பேர் பெற்றார்.

“கங்காளன் பூசுங் கவசத் திருநீற்றை”       - திருமந்திரம்.

காமாமோதக் கணமானின்:-

காமம்-விருப்பம், ஆமோதம்-மகிழ்ச்சி. கனம்-பெருமை. மான்-வள்ளி.

தேமார் தேமா காமீ:-

தேம்-தேன். ஆர்-நிறைந்த. தே-இனிமை. மா-தினைமா. காமீ- விருப்பமுள்ளவர்.