பக்கம் எண் :


168 திருப்புகழ் விரிவுரை

 

கத்து-இருள்போன்ற கூந்தலிலும்-வளர் செய் புளகித பூதரத்து-புளகித்து வளர்கின்ற மலைபோன்ற தனங்களிலும், இரு கமல கரத்து-இரண்டு தாமரை மலர் போன்ற கரங்களிலும், இதயம் உருவி-மனம் உருகி, அத்தி இடம் உரையும்-சமுத்திரத்தில் உறைந்த, நெடு மா மரத்து-சூரனாகிய நீண்ட மாமரத்தின், மலர் கனி அலைத்துவரும் இடைதலத்து-மலரையும் கனியையும் அலைந்து வந்து அமர்ந்தருளியதலாமாகிய, உரகசிகரி பகராதே-நாககிரியைத் துதி செய்யாமல், அத்தி மல உடல் நடத்தி-எலும்பும் மலமும் கூடிய உடலைச் சுமந்து, எரிக்கொள் நிரையத்தினிடை நெருப்பு மயமான நரகத்திலே, அடிமை விழலாமோ-அடியேன் விழலாமோ?

பொழிப்புரை

வேகமான நடையையுடைய மானின்பால், உபநிடதங்களை யுணர்ந்த சிவமுனிவர் தந்தவரும், பால் தேன் அமுதம் இவற்றை ஒத்த மொழியையுடைய கிளி போன்றவருமாகிய வள்ளிநாயகியார் தழுவிய பன்னிருபுயத்தை அசுரர்களும், தாவும் மலைபோன்ற அவுணர்களும் ஆகிய சர்ப்பக் கூட்டம் நடுங்கி ஒடுங்க, மரகத நிறமும் பொன்னிறமும் பொருந்திய மயில் மீது ஆரோகணித்து வந்த, தேவர் போற்றும், பெருமிதம் உடையவரே! அந்த பவளம் போன்ற உதட்டிலும், இருள் போன்ற கூந்தலிலும், புளகித்து வளர்கின்ற மலைபோன்ற தனங்களிலும், தாமரை போன்ற இரு கரங்களிலும் உள்ளம் உருகி, கடலில் முளைத்த சூரனாகிய மாமரத்தில், மலர் கனி இவற்றை அலைத்து அழித்து, வந்து அமர்ந்தருளிய நாககிரியைத் துதியாமல், எலும்புடன் கூடிய மல உடம்பைச் சுமந்து, எரிகின்ற நரகத்தில் அடியேன் விழலாமோ?

விரிவுரை

இத் திருப்புகழில் அருணகிரியார் பதங்களை அமைத்திருக்கின்ற அழகும் சமர்த்தும் மிக மிகச் சிறந்தன. தத்த தனதனன தத்த தன தனன என்ற அற்புதமான சந்த நடையழகுடன் கூடியது இத் திருப்புகழ்.

பாட்டின் பிறப்குதியைத் தமிழன்பர்கள் ஊன்றிப் படித்து இன்புறுக. தத்து என 5 முறையும், தத்தை என 3 முறையும், தத்த என 3 முறையும், எத்துணை அழகாக அந்த அடிகள் அமைந்திருக்கின்றன. ஆ! அற்புதமான பதங்கள்.

அத்துகிரினலதரத்து:-

அ துகிரின்நல் அதரத்து, பெண்களின் அதரம் பவளம் போல் விளங்கும்.