அலனவள கத்து:- அல் அன அளகத்து. அல்-இருள். அன-அன்ன. இருள்போன்ற கரிய கூந்தல். வளர்செய் புளகித பூதரத்து:- பூதரம்-மலை. ஆகுபெயராக-தனத்தைக் குறிக்கின்றது. இதயம்உருகி:- மாதர்களின்அவயவ நலத்தினால் மனம் உருகி நல்வழி விடுத்து அல்வழி யடுத்து அழிவர் பலர். அத்தி யிடனுறைவு நெடு மாமரத்து:- அத்தி-கடல். சூரபன்மன் கடைசி நேரத்தில் கடலில் இரும்பு மா மரமாக முளைத்து உலகை நடுக்கினான். உரகசிகரி:- உரகம் - பாம்பு. உரகசிகரி-நாககிரி. இம் மலையைப் பரவினோர் நரகிடைப் புகுதார். அத்தி மலவுடல் நடத்தி:- அத்தி-எலும்பு.எலும்பும் மலமும் பொருந்திய இந்த வுடம்பைச் சுமந்து பாவம் புரிவர். எரிகொள் நிரையத்தினிடையடிமை விழலாமோ:- அடியேன் எரி மயமான நரகிடை விழலாமோ! விழாதவண்ணம் ஆட்கொண்டருள்வீர். தத்து கவனவரிணத்து:- தத்து கவன அரிணம். தத்து - வேகமான, கவனம் - நடை. அரிணம்-மான். உபநிட விதத்து முநியுதவு:- வள்ளி மலையில் தவஞ்செய்த உபநிடதங்களை யுணர்ந்த சிவமுனிவர் பார்வையால் மானிடம் வள்ளி தோன்றுமாறு செய்தார். மொழியாறுத் தத்தை நறவை யமுதத்தை:- மொழியால்துத்தத்தை நறவை அமுதத்தை பால், தேன், அமுதம் இவற்றை நிகர்க்கின்ற இனிய மொழியையுடையவன். தத்துததி துரகதத்து மிகுதி திசர்:- தத்து - தாவுகின்ற, உததி - கடல் போன்ற. துரகதம் - குதிரை. திதிசர் - திதி பெற்றவர்கள்; தைத்தியர்கள். தத்து மலையவுணர்:- தத்து - தாவுகின்ற மலை போன்ற அவுணர்கள். |