த்ரயமத் திலகப்பொருள்வ் ருத்தியினைப் பழுதற்றுணர்வித்தருள் வித்தகச்ணு குருநாதா” - (கடலைச்சிறை) திருப்புகழ் கூராழியால்..........................................கோபாலராயன்:- அருச்சுனன் தன்மகன் அபிமன்யுவை சயத்ரதன் நீதிக்கு மாறாகப்பொருது கொன்றமையால், சினந்து “நாளை பொழுது சாய்வதற்குள் சயத்ரதனைக் கொல்லேனாயின் தீப்புகுந்து மாள்வேள்” என்று சூளுரை பகர்ந்து, பதினான்காவது நாள் துரியோதனன் சேனையை அழித்தேகுவானாயினான். நெடுந் தொலைவில் சயத்ரத னிருந்தமையால் அவனைக் கொல்வது அரியது எனத் தேர்ந்த கன்னபிரான் ஆழியால் ஆதித்தனை மறைத்தருளினார். தனஞ்சயன் தீப்புக முயலுகையில் சயத்ரதன் அருகிலடைந்தனன். அப்போது கண்ணபிரான் சக்கரத்தைவிலக்கி அருச்சுனனைக் கொண்டு சயத்திரதனைக் கொல்வித்து உய்வுதந்தனர். விரிவை திருப்புகழ் விரிவுரை முதல் தொகுதி 39ஆம் பக்கத்திற் காண்க. முருக தலங்களுள்சிறந்தது விராமலை. அருணகிரியார் வயலூரில் தங்கியிருந்தபோது, கனவில் பெருமான் தோன்றி “நம் விராலிமலைக்கு வருக” என்று அருள்புரிந்தனர். அப்பரைத் திருவாமூருக்கு அரனார் அழைத்ததுபோல் அருணகிரியார் உடனே எழுந்து விராலிமலைபோய் வழிப்பட்டனர். கருத்துரை சங்கப்புலவர்கலகந் தீர்த்த குருநாதரே! திருமால் மருகரே! விராலிமலை வேலவரே! தேவரீருடைய ஆறுமுகங்களையும் பன்னிரு புயங்களையும், திருவடிகளையும், அம்மையார் இருவரையும் வேலையும் மயிலையும் உண்மை யறிவானந்த உருவையும் இடையறாது அடியேன் நினைந்து உய்வேனாக. பாதாள மாதி லோக நிகலமு மாதார மான மேரு வெனவளர் பாடீர பார மான முலையினை விலைகூறிப் பாலோடு பாகு தேனெ னினியசொ லாலேய நேக மோக மிடுபவர் பாதாதி கேச மாக வகைவகை கவிபாடும் |