குல நாகந் தந்த:- குலம்-கூட்டம். சர்ப்பம் போன்று கூட்டமாக வந்த அந்த அசுரர்கள் நடுங்குமாறு முருகர் மயில்மீது சென்று அழித்தருளினார். கருத்துரை நாககிரி நாதனே! நரகிடை விழாவண்ணம் நல்லருள் செய்வீர். அத்த வேட்கைப் பற்றி நோக்கத் தத்தை மார்க்குத் தமராயன் பற்ற கூட்டத்திற்ப ராக்குற் றச்சு லதோட்பற் றியவோடும் சித்த மீட்டுப் பொய்த்த வாழ்க்கைச் சிக்கை நீக்கித் திணிதாய சித்ர வாக்குப் பெற்று வாழ்த்திச் செச்சை சாத்தப் பெறுவேனோ கொத்து நூற்றுப் பத்து நாட்டக் கொற்ற வேத்துக் கரசாய குக்கு வாத்தச் சர்ப்ப கோத்ரப் பொற்ப வேற்கைக் குமரேசா தத்வ நாற்பத் தெட்டு நாற்பத் தெட்டு மேற்றுத் திடமேவும் தர்க்க சாத்ரத் தக்க மார்க்கச் சத்ய வாக்யப் பெருமாளே. பதவுரை கொத்து நூற்றுபத்து நாட்டம்-கூட்டமாக ஆயிரங்கண்களையுடைய, கொற்ற வேத்துக்கு-வீரவேந்தனாகிய இந்திரனுக்கு, அரச ஆய-அரசனாக விளங்கும், குக்குட அத்த-கோழிக் கொடியை ஏந்திய கரத்தினரே! சர்ப்ப கோத்திர- நாகமலையினரே! பொற்ப-அழகரே! வேல் கை குமர ஈசா-வேலை ஏந்தும் திருக்கரத்தையுடைய குமாரக் கடவுளே! தத்வம்-தத்துவங்களான, நாற்பத்துஎட்டும் நாற்பத்து எட்டும்-தொண்ணூற்றாறினையும், ஏற்று திடம் மேவும்-ஏற்றுக் கொண்டு உறுதியுடன் கூறும், தர்க்க சாத்ர-தருக்க நூல்களில் சொல்லப்பட்ட, தக்க மார்க்க, தகுந்த நீதி வழிகளில், சத்ய வாக்ய-சத்தியமான மொழிகளைக் கூறும்; பெருமாளே-பெருமிதம்உடையவரே! அத்த வேட்கை பற்றி நோக்கு-பொருளில் |