ஆசை வைத்து தனை நோக்குகின்ற, அதத்தை மார்க்கு தமராய்-அந்த கிாளி போன்ற விலை மாதர்கட்கு வேண்டியவனாய், அன்பு அற்ற கூட்டத்தில்-அன்பு இல்லாதவர், கூட்டத்தில், பராக்கு உற்று-எனது நோக்கத்தை வைத்து, அச்சுதோள் பற்றி-உரு அமைந்த அவர்கள் தோளை அணைக்கும் பொருட்டு, ஓடும் சித்தம் மீட்டு-ஓடுகின்ற மனத்தை அவ்வழியினின்று திருப்பி, பொய்த்த வாழ்க்கை சிக்கை நீக்கி-பொய்யான உலக வாழ்க்கையின் சிக்கினை யகற்றி, திணிது ஆய-வன்மை வாய்ந்த, அவ்வாக்கினால் தேவரீரை வாழ்த்தி, செச்சை சாத்த பெருவேனோ-அதன் பயனாக உமது வெட்சி மாலையைப் பரிசாக அணியப்பெறும் பாக்கியம் அடியேனுக்கு கிடைக்குமோ? பொழிப்புரை கூட்டமாய ஆயிரங் கண்களையுடைய வீர வேந்தனாம் இந்திரனுக்கு அதிபரே! சேவல் கொடியை ஏந்திய கையரே! நாக மலையில் வாழும் அழகரே! வேலேந்திய கையை யுடைய குமாரக் கடவுளே! தொண்ணூற்றாறு தத்துவங்களையும் ஏற்றுக் கொண்டு வன்மையான தருக்க நூல்களில் சொல்லப்பட்ட தகுந்த நீதி வழிகளில் உள்ள சத்திய மொழிகளைப் பேசும் பெருமிதம் உடையவரே! பொருளாசை கொண்ட கிளிபோன்றபொது மாதருக்கு உறவுடையவனாய், அன்பு இல்லாதவர் கூட்டத்தில் என்று நோக்கத்தை வைத்து, உரு அமைந்த அவர்களின் தோள்களைத் தழுவும் பொருட்டு, ஓடுகின்ற மனத்தை அவ்வழியினின்றும் திருப்பி, பொய்யான வாழ்க்கை யென்கின்ற சிக்கை யகற்றி, வன்மை வாய்ந்த அழகிய வாக்கை அடியேன் பெற்று, அவ்வாக்கினால் தேவரீரை வாழ்த்தி, அதன் பயனாக உமது வெட்சி மாலையைப் பரிசாகப் பெறும் பேற்றினை அடியேன் பெறுவேனோ? விரிவுரை அத்த வேட்கைப்பற்றி நோக்கத் தத்தை மார்க்கு:- பொன்னையே விரும்பி, அதனைப் பறிக்கும் நோக்கமே கொண்டவர்கள் விலைமகளிர், நோக்கு அத்தத்தைமார். தத்தை-கிளி, கிளிபோல் கொஞ்சிப் பேசுவார்கள். மாதர் வசமாய்ஓடும் மனத்தை அதன் போக்கை மாற்றி நல்லவழியில் திருப்ப வேண்டும். பொய்த்த வாழ்க்கைச் சிக்கை நீக்கி:- பொய் என்ற சொல்லுக்கு இரண்டு பொருள்கள். இல்லாத ஒன்று |