ஆகமொத்தம் 96 இவற்றின் விளக்கத்தை வேதாந்தத் தத்துவக் கட்டளையில் காணலாம். தர்க்க சாத்திரம்:- தருக்க நூல் ஒரு சிறந்த அறிவுத் திறனுடையது. அது பொருள்களை நிச்சயிப்பது. வடமொழியில்நியாய சாத்திரத்தைச் செய்தவர் கௌதமர். வேதம் 4; அங்கம் 6; உபாங்கம் 4; ஆகவித்தை 14 உபாங்கம் ; (1) மீமாம்ஸை. (2) நியாயம், (3) புராணம், (4) ஸ்மிருதி (தர்ம சாத்திரம்) உலகத்துக்குக் கர்த்தா இறைவன் என்று வேதஞ் சொல்லுகின்றது. வேதத்தின் சொல்லை அர்த்தத்தால் மீமாம்ஸம் நிர்ணயிக்கின்றது. இதைப் பல யுக்திகளால் தீர்மானிப்பது நியாய சாஸ்திரம். தருக்க சங்கிரகம், நியாயப்பிரகாசம் முதலிய நூல்களைக் காண்க. கருத்துரை நாககிரி நாயகா! வாக்கு வன்மையையும் வெட்சி மாலையையுந் தந்தருள்வீர். பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு பக்ஷிந டத்திய குகபூர்வ பச்சிம தக்ஷிண வுத்தர திக்குள பத்தர்க ளற்புத மெனவோதுஞ் சித்ரக வித்துவ சத்திமி குத்ததி ருப்புக ழைச்சிறி தடியேனுஞ் செப்பென வைத்துல கிற்பர வத்தெரி சித்தவ னுக்ரக மறவேனே கத்திய தத்தைக ளைத்துவி ழத்திரி கற்கவ ணிட்டெறி தினைகாவல் கற்றகு றத்திநி றத்தக ழுத்தபடி கட்டிய ணைத்தப னிருதோளா சத்தியை யொக்க இடத்தினில் வைத்தத |