கருத்துரை நாககிரி மேவும் வள்ளி மணவாளா! திருப்புகழைப் பாடும் திறத்தினை அருளிய அநுக்கிரகத்தை ஒரு போதும் மறவேன். புற்புதமெ னாம அற்பநிலை யாத பொய்க்குடில்கு லாவு மனையாளும் புத்திரரும் வீடு மித்திரரு மான புத்தி சலியாத பெருவாழ்வு நிற்பதொரு கோடி கற்பமென மாய நிட்டையுடன்வாழு மடியேன்யான் நித்தநின தாளில் வைத்ததொரு காதல் நிற்கும் வகையோத நினைவாயே சற்பகிரி நாத முத்தமிழ்வி நோத சக்ரகதை பாணி மருகோனே தர்க்கசமண் மூகர் மிக்கழு வேற வைத்தவொரு காழி மறையோனே கற்புவழு வாது வெற்படியின் மேவு கற்றைமற வாணர் கொடிகோவே கைத்தஅசு ரேசர் மொய்த்தகுல கால கற்பதரு நாடர் பெருமாளே பதவுரை சற்பகிரி நாத-நாககிரிக்குத் தலைவரே! முத்தமிழ் விநோத-முத்தமிழில் பொழுது நோக்குபவரே; சக்ர கதை பாணிமருகோனே-சக்கரத்தையும் கதையையும் ஏந்திய கரத்தினராகிய திருமாலின் திருமருகரே! தர்க்க சமண் மூகர்-வாது செய்து வாழிந்த ஊமைகள் போல் நின்ற சமணர்களை, மிக்க கழு ஏறவைத்த-மிகுந்த கழுவில் ஏறுமாறு செய்து, ஒரு காழி மறையோனே-ஒப்பற்ற சீகாழி அந்தணரே! கற்பு வழுவாது-கற்பு நிலை தவறாமல், வெற்பு அடியில் மேவு-வள்ளி மலையின் அடிவாரத்தில் இருந்த, கற்றை மறவாணர் கொடிகோவே-கூட்டமான வேடர்களின் கொடி போன்ற வள்ளிபிராட்டியின் தலைவரே! கைத்த அசுர ஈசர்-வெறுப்புடைய அசுரத் தலைவர்களின், மொய்த்த குல கால-நெருங்கிய குலத்துக்கு முடிவைச் செய்தவரே! கற்பதரு நாடர்- கற்பத்தருவுடைய விண்ணாட்டுத் தேவர்கள் போற்றும், பெருமாளே- பெருமையின் மிகுந்தவரே! புற்புதம் என் நாம-நீர்க்குமிழி என்றுபேர் |