பக்கம் எண் :


178 திருப்புகழ் விரிவுரை

 

படைத்து, அற்பம்நிலையாத-சிறிது நேரம்கூட நிலைத்திராத-பொய் குடில் குலாவு மனையாளும்-பொய்க்குடிசையான இந்தவுடம்புடன் குலவுகின்ற- மனையாளும் புத்திரரும்-புதல்வர்களும், வீடும்-வீடும், மித்திரரும்-நண்பர்களும் ஆன சூழலில், புத்தி சலியாத பெருவாழ்வு-புத்தி சோர்வு அடையாமல் இவ்வாழ்வு பெருவாழ்வு, நிற்பது ஒருகோடி கற்பம் என்-இது நிலைத்து நிற்பது ஒரு கற்ப காலம் என்று கருதும், மாய நிடடை உடன் வாழும்-மயக்கத் தியான நிலையில் வாழுகின்ற, அடியேன் யான்-அடியேனாகிய நான், நித்தம் நின்தாளில்--தினந்தோறும் உமது திருவடியில், வைத்தது ஒரு காதல்- வைத்துள்ள ஒப்பற்ற அன்பானது, நிற்கும் வகை ஒரு நினைவாயே-நிலைத்து நிற்கும் வழியை உபதேசிக்க தேவரீர் நினைத்தருள வேண்டும்.

பொழிப்புரை

நாக மலைக்கு நாதரே! இயல் இசை நாடகம் என்ற முத்தமிழில் பொழுது போக்குபவரே! சக்கரத்தையும் கதையையும் கைகளில் ஏந்திய திருமாலின் திருமருகரே! தர்க்கஞ் செய்து வாயிழந்து ஊமைகள் போல் தோல்வியுற்ற சமணர்களை மிகுந்த கழுவில் ஏறவைத்த ஒப்பற்ற சீகாழி யந்தணரே! கற்பு நெறி வழுவாமல், வள்ளிமலை யடிவாரத்தில் வாழ்ந்த கூட்டமான வேடர் குலக்கொடியாகிய வள்ளிநாயகியின் கணவரே! வெறுப்புற்ற கற்பக மரம் பொருந்திய விண்ணவர்கள் போற்றும் பெருமிதமுடையவரே! நீர்க் குமிழியைப் போல், சிறிது நேரமுூம நிலைத்திராத பொய்யான இந்த உடம்புடன் குலவுகின்ற மனைவி, மக்கள், வீடு, நண்பர்கள் ஆன சூழலில் அறிவு சோர்வடையாமல், இது பெருவாழ்வு, இது ஒரு கற்ப கோடி காலம் நிலைத்து நிற்பது என்று மாய மயக்கத்தியானத்தில் வாழுகின்ற அடியேன், நாள்தோறும் உமது திருவடியில் வைத்த ஒப்பற்ற அன்பு நிலைத்து நிற்கும் வகையை உபதேசித்தருள வேண்டும்.

விரிவுரை

புற்புத மெனாம அற்ப நிலையாத பொய்க்குடில்:-

புற்புதம்-நீர்க்குமிழ். நீர்க் குமிழியைப்போல் இந்த உடம்பு விரைவில் அழியுந் தன்மையது.

“நீர்க்குமிழிக்கு நிகரென்பர் யாக்கை” -கந்தரலங்காரம் (66)

பெருவாழ்வு நிற்பதொரு கோடி கற்ப மென:-

அற்ப ஆயுளை மூடமதியால் கற்பகாலம் வாழ்வதாக எண்ணுகின்றார்கள்.