ஒரு கற்பமன்று. ஒருகோடி கற்ப காலம் நாம் வாழ்வோம் என்று கருதுகின்ற பேதை மதியை என்னென்று இகழ்வது? ஒரு கற்பம்எத்துணை காலம் என்பதைத் திருப்புகழ் விரிவுரை 3ஆம் தொகுதி முத்துக்குச்சிட்டு என்ற பாடலில் விரிவுரையில் 229ஆம் பக்கத்தில் காணலாம். இப்படியான கற்பங்கள் ஒரு கோடிவாழ்வதாக எண்ணுகின்றார்கள் மந்த மதி படைத்த மனிதர்கள். நித்த நினதாளில் வைத்த தொரு காதல் நிற்கும் வகையோத நினைவாயே:- முருகப்பெருமான் திருவடியில் வைத்த அன்பு என்றும் நிலைத்திருக்க வேண்டும். இதைத்தான் வரமாக வேண்டுகின்றார் காரைக்காலம்மையார். “இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டுகின்றார்” முத்தமிழ் விநோத:- முருகப்பெருமான் தமிழில் அளவற்ற அன்புள்ளவர் தமிழிலேயே பொழுது போக்குகின்றவர். “முத்தமிழ்வித்வ விநோதா கீதா” (மைக்குழ) திருப்புகழ். “அதிமதுர சித்ரகவி நிருபணு மகத்தியனும் அடிதொழு தமிழ்த்ரய விநோதக் கலாதரனும் - திருவகுப்பு (12) “மீனவனுமிக்கவுவோருமுறைபொற்பலகை மீதமர்தமிழ்த்ரய விநோதக் காரனும்” - திருவகுப்பு (4) தர்க்க சமண்மூகர்:- திருஞான சம்பந்தருடன் சமணர்கள் அனல் வாதம் புனல் வாதம் புரிந்து வாயடங்கி ஊமைகள் போல் ஆனார்கள். விளக்கம் திருப்புகழ் விரிவுரை 5ஆம் தொகுதி 129ஆம் பக்கத்தில் பார்க்கவும். கற்பு வழுவாது வெற்படியில் மேவு.......................கொடி:- வள்ளியம்மையின் கற்புத்திறனை வியந்து கூறுகின்றார். கருத்துரை நாககிரி நாதா! உன் பாத மலரில் நீங்காத அன்புடன் நிற்கும் வகை அருள் செய்வீர். பொற்சித்ரப் பச்சைப் பட்டுக் கச்சிட்டுக் கட்டிப் பத்மப் |