புட்பத்துக் கொப்பக் கற்பித் தினைஞோர்கள் புட்பட்டுச்செப்பத் துப்பற் கொத்தப் பொற் றித்தத் திட்பப் பொற்பிற் பெற றுக்ரச் சக்ரத் தனமானார் கற்சித்தச் சுத்தப் பொய்ப்பித் தத்திற்புக் கிட்டப் பட்டுக் கைக்குத்திட் டிட்டுச் சுற்றித் திரியாமல் கற்றுற்றுச் சித்திக் கைக்குச் சித்திப்பப் பக்ஷத் திற்சொற் கற்பித்தொப் பித்துக் கொற்றக் கழல்தாராய் குற்சித்துக் கொட்டுக் கொட்டுத் துக்கச்சத் துக்குக் குக்குக் குக்குக்குக் குக்குக் குக்குக்
கெனமாறா குட்சிக்குப் பக்ஷிக் கைக்குக் கக்ஷத்திற் பட்சத் தத்தக் கொட்டிச்சுட் டிக்கொக் ரிக்குக் குடதாரி சற்சித்துத்தொற்புத் திட்பட் சத்தர்க்கொப் பித்தட் சத்துச் சத்தத்தைச் சத்திக் கொச்சைப் பதிவாழ்வே தக்ஷப்பற் றுக்கெர்ப் பத்திற் செற்பற்றைச் செற்றிட்டுச்சச் சற்பப்பொற் றைக்குட் சொக்கப் பெருமாளே. பதவுரை குற்சித்து-(பசிக்கு இரையில்லேயே யென்று) அருவருப்புடன், கொட்டு கொட்டு-கொட்டு கொட்டு என்றும், துக்க அச்சத்து-பசியினால் துக்கமும் அச்சமுங் கொண்டு, குக்குக்குக் குக் குக்குக்குக்குக் குக் குக்கு என மாறா குக் குக்குக் குக் குக்குக் குக் குக்குக் குக் குக்குக குக்குக்கு என்று ஓயாமல், குட்சிக்கு பட்சிக்கைக்கு-வயிற்றின் இரைக்காக, கட்சத்தில் பட்சம் தத்த- விலாப்புறத்தில் சிறகுபடும்படி, கொட்டி சுட்டி-அடித்துக் கொண்டு குறிப்பாக, கொக்கரி-கொக்கரிக்கின்ற, குக்குடதாரி-சேவலைத் தரித்தவரே! சற்சித்து-சத்தும் சித்தும் ஆனவராய், தொல் புத்தி பட்ச அத்தர்க்கு-பழமை ஞானம் அன்பு என்ற இவற்றையுடையவராய, தந்தைக்கு, அட்சத்து சத்தத்தை ஒப்பித்த- அட்சரத்துச் சத்தமாகிய தேவாரப் பாடல்களை சமர்ப்பித்த, சத்தி-ஆற்றல்மிக்க, கொச்சை பதி |