பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 181

 

வாழ்வே-சீகாழியும் பதியில் வாழ்பவரே! தட்ச பற்று-தட்சணம் பற்றுவதும், கெர்பத்தில் செல்-கருவிலே செலுத்துவதுமான, பற்றை செற்றிட்டு-பற்றுக்களை ஒழித்து, உச்சம்-உயர்ந்துள்ள, சற்ப பொற்றைக்கு உள்-நாகமலையில் வாழ்கின்ற, சொக்க-அழகிய, பெருமாளே-பெருமையிற் சிறந்தவரே! பொன் சித்ர பச்சை பட்டு கச்சு அணிவித்து, கட்டி பத்ம புட்பத்துக்கு ஒப்ப-கட்டித் தாமரைப் பூவுக்கு ஒப்பாகும் என்று, கற்பித்து இளைஞோர்கள் - கற்பனைக் கூறி இளைஞர்கள், புள்பட்டு செப்பத்து-பறவை வலையில் சிக்கியதுபோல் (வேசையர் வலையிற் சிக்கி) பல் கொத்தப்பெற்று, பொன் சித்த-பொன்னை அடைவதற்கு, திட்ப-தெளிவாகவும், பொற்பில்-அழகாகவும், பேசி, பெற்ற- பொன்னைப் பெறுகின்ற, உக்ர சக்ர தனமானார்-கொடிய சக்கரம் போல் வட்டவடிவமான தனங்களையுடைய பொது மாதர்களின், கல் சித்த-கல்லைப் போல் கடினமான நெஞ்சமாகிய, சத்த பொய் பித்தத்தில் புக்கு-சுத்தப் பொய்யான பைத்தியத்துக்குள் புகுந்து, இட்ட பட்டு-அதில் அதிக விருப்பம் வைத்து, கைகுத்து இட்டு இட்டு தன்னைப்போல் அவ்வேசையரிடம் வரும் காமுகர்களுடன் கைக்குத்துச் சண்டையும், போட்டு, சுற்றி திரியாமல் - அங்கு இங்குஞ்சுற்றி அலையாமல், கற்று உற்று-ஞான நூலைக் கற்று உம்மையுடைந்து, சித்தி கைக்கு சித்திப்ப-சித்தியானது கைக்கூடுவதற்கு, பட்சத்தில்-அன்புடன், சொல் கற்பித்து-நல்ல சொற்களைக் கற்பித்தும், ஒப்பித்து-அவற்றை உமது திருவடிக்கே ஒப்புவிக்குமாறும், கொற்ற கழல் தாராய்-உமது வீரக்கழல் அணிந்த திருவடியை அடியேனுக்குக் தந்தருள்வீர்.

பொழிப்புரை

பசிக்கு இரையில்லையே என்று அருவருப்புடன் கொட்டுக் கொட்டு என்னும் பசியால், துக்கமும் அச்சமுங்கொண்டு, குக்குக்குக் குக்குக்குக் குக்குக்குக் குக்குக் என்று ஓயாமல், வயிற்றின் இரைக்காக விலாப்புறத்துப் பக்கங்களில் படும்படி இறகை யடித்துக் குறிப்புடன் கொக்கரிக்கின்ற சேவலைத் தரித்தவரே! சத்தாய் சித்தாய் பழயராய் ஞானியாய் அன்புடைய தந்தையாராகிய சிவபெருமானுக்கு அட்சரத்து ஒலியாகிய தேவாரப் பாடல்களைச் சமர்ப்பித்த, ஆற்றலையுடைய சீகாழிச் செல்வமே! உடனே பற்றிக் கொள்வதும் கருவிலேயே பற்றுவதுமாகிய பற்றுக்களை ஒழித்து, உயர்ந்த நாகமலையின் எழுந்தருளியுள்ள அழகிய பெருமிதமுடையவரே! அழகிய விசித்திரமான பச்சைப் பட்டாலாகிய இரவிக்கையை அணிவித்து, கட்டித்தாமரைப் பூவுக்கு ஒப்பாகும் என்று கற்பனை கூறி இளைஞர்கள், பறவை வலையில் சிக்கியது போல், அவ்வேசையரது வலையில் சிக்கி பல்லால் கொத்தப் பெற்று, பொன்னை