அடைவதற்கு வேண்டு தெளிவாகவும் அழகாகவும் பேசிப் பெறுகின்ற, கொடிய சக்கரம்போல் வட்டவடிவான கொங்கைகளையுடைய மாதர்களின், கல்லைப் போன்ற கடினமான நெஞ்சமாகிய சுத்தப் பொய்யான பைத்தியத்துக்குள் புகுந்த, அதில் அதிக விருப்பத்தை வைத்து, தன்னைப்போல் அவ்வேசையரிடம் வரும், பிற காமுகர்களுடன் கைக் குத்துச் சண்டையிட்டு அங்கும் இங்கும் சுற்றித் திரிந்து அலையாமல், ஞான நூல்களை ஓதி உம்மையடைந்து, நல்ல சித்தி கைகூடுமாறு கற்பித்தும், அந்சொற்களை உமக்கே ஒப்பித்தும் உய்ய உமது வீரக்ழலணிந்த திருவடிகளை தந்தருளுவீர். விரிவுரை இத்திருப்புகழில் முதல் மூன்று அடிகளில் விலைமகளிர் மாய வலையில் வீழ்ந்த இளைஞர்களின் பரிதாப நிலையைக் கூறுகின்றார். கற்றுற்று:- கற்று உற்று. ஞான நூல்களைக் கற்றும், கற்றதன் பயனாக அப்பரமபதியை உற்றும். சித்தி கைக்குச் சித்திப்ப:- அஷ்டமா சித்திகளும் கைக்குள் சித்திக்க அருளுவான் முருகன். சொற்கற்பித் தொப்பித்து:- உயர்ந்த சொற்களைக் கற்பிக்க வேண்டும் என்று வேண்டுகின்றார். “வரிய பதத்தினின் அருவி யிருப்பிடம் அமையு மெனக்கிடம் உனது பதச் சரண்” - (குருவியென) திருப்புகழ். குற்சித்து:- குற்சிதம்-அருவருப்பு. சேவல் பசிக்கு இசையில்லையே என்று அருவருப்புடன் கொக்கரிக்கின்றது. கொட்டுக் கொட்டு:- கொட்டுக்கொட்டு என்று பசித்திருக்கின்றது. துக்கச் சத்து:- துக்க -அச்சம். துன்பமும் திகிலும் அடைகின்றது. குக்குக்குக்குக்குக்கு:- பசியின் காரணமாகக் கோழி குக்குக்வென்று ஒலிக்கின்றது. |