பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 185

 

அச்சப்படவும், வரு நிசிசரர் தளம்-வருகின்ற இரக்கதர்களுடைய சேனைகள், நிகில சகலமும் மடிய-சிறிதும் இல்லாமல் முழுவதும் அழிந்தொழிய, ஓர் படைதொடு-ஒப்பற்ற சர்வ சங்கார படையை ஏவிய, நிருப-தலைவரே! குரபர- மேலான குருநாதரே! சுரபதி பரவிய-தேவர் கோமானாகிய இந்திரனால் துதிசெய்யப் பெற்ற, பெருமாளே-பெருமையிற் மிக்கவரே! கொடிய மறலியும்- கொடுமை மிக்க கூற்றவனும், அவனது கடகமும்-அக்கூற்றுவனுடைய சேனையும், மடிய - மாண்டொழியுமாறு, ஒரு தினம்-ஒரு நாளில், இருபதம் வழிபடும்-தேவரீருடைய திருவடிகளிரண்டையும் வழிபடுகின்ற, குதலை அடியவன்-சிறுகுழந்தையாகிய அடியேன், நினது அருள்கொடு-தேவரீருடைய திருவருளைத் துணையாகக் கொண்டு, பொரும் அமர் காண-போர் செய்கின்ற யுத்தத்தைப் பார்க்கும் பொருட்டு, குறவர் மகள் புணர்-வள்ளிநாயகியார் தழுவுகின்ற, புயகிரி சமுகமும்-மலைபோன்ற தோள்களின் கூட்டமும், அறுமுகமும்-ஆறு திருமுகங்களும், வெகு நயனமும்-பல கண்களும், ரவி உமிழ் கொடியும்-சூரியனை உமிழ்கின்ற கோழிக் கொடியுடனும், அகிலமும் வெளிபட-பிற யாவும் வெளிப்படவும், இருதிசை இருநாலும்-மேல் கீழ் ஆகிய இரண்டு திசைகளுடன் எட்டுத் திசைகளும், படியும்-பூமியும் நெடியன எழுபுணரியும்- நீண்ட ஏழு கடல்களும், முது திகிரி திகிரியும்-பழமையான வளைந்துள்ள சக்கரவாளகிரியும், வருக எனவருதகு-வா என்ற அழைக்க உடன் வந்து அசைவதுபோல் அசையவும், பவுரி வரும்-கூத்தாடுகின்ற, ஒரு மரகத துரகத மிசை-ஒப்பற்ற பச்சை மயில்வாகனத்தின் மீது, ஏறி- ஆரோகணித்து, பழைய அடியவருடன்-பழமையான அடியார்களுடனும், இமையவர் கணம்-தேவர்களுடைய கூட்டம், இருபுடையும்-இருப்பக்கங்களிலும், மிகு தமிழ்கொடு மறைகொடு-பெருமை மிகுந்த தமிழ்ப்பாடலையும், வேதகீதங்களையும் கொண்டு, பரவ-துதித்துக்கொண்டு வரவும், வரும் அதில்- முன்னொருமுஐற வந்தருளியதுபோல், அருணையில் ஒரு விசை- திருவண்ணாமலையில் இன்னொரு முறை, வரவேணும்-வந்தருளவேண்டும்.

பொழிப்புரை

சடாபாரத்தைத் தாங்கியவரும், ஆலகால விடத்தைக் கண்டத்தில் தரித்தவரும், நாகாபரணரும், சிறந்த மழுவை ஏந்தியவரும், பிறைச் சந்திரனைத் தரித்தவரும், தூய்மை யுடையவரும், இனிய நாகத்தையுடைய உடுக்கையையும் மானையும் ஏந்திய திருக்கரத்தினரும், இமய வல்லியை இடப்பாகத்தில் உடையவரும், பிரம சிகரங்களை மாலையாகத் தரித்தவரும், பாரமான பூமியைத் தமது திருவருளால் தாங்கு